சுவையான பாவ் பாஜி செய்வது எப்படி?





சுவையான பாவ் பாஜி செய்வது எப்படி?

0

என்ன தான் ஸ்டார் ஹோட்டல் விருந்தே ஆனாலும், மல்டிகுசின் ரெஸ்ட்டாரன்ட்டுகளில் சாப்பிட்டாலும் தெருவோரக் கடைகளில், கையேந்தி பவன்களில் சாப்பிடுகிற உணவுகளுக்கு ஈடாகுமா? 

சுவையான பாவ் பாஜி செய்வது எப்படி?
அதிலும் சில அயிட்டங்களைத் தெருவோரக் கடைகளில் மட்டும் தான் ருசிக்க வேண்டும். பத்து மடங்கு விலை கொடுத்தாலும் அந்தச் சுவை பெரிய ஹோட்டல்களில் கிடைக்காது. 

தெருவோரத்து குட்டிக் கடைகளிலும் தள்ளு வண்டிகளிலும் கிடைக்கும் ஸ்ட்ரீட் ஃபுட் சிலவற்றை அதே சுவையில் வீட்டில் தயாரித்து ருசிக்க ஆசையா..? வீக் எண்டில் உங்கள் வீட்டில் ஸ்ட்ரீட் ஃபுட் ஃபெஸ்டிவல் நடத்தி அசத்துங்கள்.

தேவையானவை:

குண்டான உடம்பை குறைக்கும் மருந்து பூண்டு !

பாவ் பன் - 4

வெண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன்

பாஜி செய்ய:

வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு - ஒரு கப்.

வெங்காயம் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

பாவ் பாஜி மசாலா - 3 டீஸ்பூன்.

வேக வைத்த காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பச்சைப் பட்டாணி) - கால் கப்.

குடமிளகாய் - ஒன்று (பொடியாக நறுக்கவும்).

தக்காளி - 4 (பொடியாக நறுக்கவும்).

எலுமிச்சைச் சாறு - சிறிதளவு.

காய்ந்த மிளகாய் விழுது - 2 டீஸ்பூன் (காய்ந்த மிளகாயை 10 நிமிடங்கள் வெந்நீரில் ஊற வைத்து அரைத்துக் கொள்ளவும்).

வெண்ணெய், உப்பு - தேவையான அளவு.

பொடியாக நறுக்கிய கொத்த மல்லித்தழை - சிறிதளவு.

தூங்கி எழும் போது பேக் பெயின் இருக்கா? – காரணம் இது தான் !

செய்முறை:

சுவையான பாவ் பாஜி செய்வது
காய்கறிக் கலவையை மசிக்கவும். வாணலியில் வெண்ணெய் விட்டுச் சூடாக்கி வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்து வதக்கவும். 

அதனுடன் மசித்த காய்கறிகள், மசித்த உருளைக்கிழங்கு சேர்த்து நன்கு கலக்கவும். பிறகு பாவ் பாஜி மசாலா, காய்ந்த மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும். 

அதனுடன் தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும். தண்ணீர் வற்றி நன்கு கிரேவி பதத்துக்கு வரும் போது ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இறக்கவும். 

எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

தவாவில் வெண்ணெய் சேர்த்து உருக்கி, பாவ் பன்களைப் போட்டு இருபுறமும் டோஸ்ட் செய்து எடுக்கவும். 

பாவ் பாஜி மசாலாவுடன் எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கவும். மேலே கொத்த மல்லித்தழை, வெங்காயம் தூவி, ஒரு டேபிள் ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து பன்களுடன் சூடாகப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)