சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

0

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை, நாம் எப்போதும் கடையில் தான் வாங்கி சாப்பிடுவோம். 

சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

கவலைய விடுங்கள், இனி நாம் விரும்பி சாப்பிடும் ஐஸ்கிரீமை வீட்டிலேயே செய்து மகிழ்ச்சியுடன் சாப்பிடலாம்.

ஆனா எப்படி வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்வது என்ற சந்தேகமா..? கலவையை விடுங்க இந்த பகுதில் சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி? வீட்டில்  செய்யலாம் என்று பார்ப்போம்.

தேவையானவை :

ஐஸ்க்ரீம் - 6 ஸ்கூப் (Scoop)

கார்ன் ஃப்ளேக்ஸ் (Corn Flakes) - 5 மேஜைக்கரண்டி

முட்டை - 2

தேங்காய்த்துறுவல் (விரும்பினால்) - 2 மேஜைக்கரண்டி

பாதாம்பருப்பு - 10

முந்திரிப்பருப்பு                             10

தேன் - தேவையான அளவு

நெய் - 1 மேஜைக்கரண்டி

நல்லெண்ணெய் - 300 மில்லி லிட்டர்

சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !

செய்முறை :

சில்லுன்னு ப்ரைட் ஐஸ்கிரீம் செய்வது எப்படி?

கார்ன் ஃப்ளேக்ஸை கரகரப்பான தூளாக்கிக் கொள்ளவும். பாதாம் பருப்பு, முந்திரிப் பருப்பை நெய்யில் வறுத்து, சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும்.

முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் எடுத்து அடித்து வைத்துக் கொள்ளவும்.

ஐஸ்க்ரீமை ஃப்ரீஜரில் (Freezer) சில நிமிடங்கள் வைத்து எடுத்து முட்டையில் நனைத்து, அதன்பின் கார்ன் ஃப்ளேக்ஸ் தூளில் புரட்டி எடுத்து மறுபடியும் ஃப்ரீஜரில் 15 நிமிடங்கள் வைக்கவும்.

வாணலியில் இதயம் நல்லெண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் ஐஸ்க்ரீம் உருண்டைகளை (Scoop) ஒவ்வொன்றாக போட்டு 10 வினாடிகளில் எடுத்து விடவும்.

மூட்டு வலி (ருமடாய்ட் ஆர்த்ரைடிஸ்) பற்றி அறிய !

பரிமாறும் சிறிய பாத்திரத்தில் (Bowl) வைத்து தேங்காய்த் துறுவல், தேன், வறுத்து வைத்துள்ள முந்திரிப்பருப்பு மற்றும் பாதாம் பருப்பை சுற்றிலும் வைத்து பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)