சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?





சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?

0

தேவையானவை : 

சோயா சங்க்ஸ் - ஒரு கப் 

கரம் மசாலாத்தூள் - அரை டீஸ்பூன் 

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 

கடலை மாவு - 4 டேபிள் ஸ்பூன் 

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன் 

இஞ்சி - பூண்டு விழுது - அரை டீஸ்பூன் 

ஓமம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன் 

பெரிய வெங்காய விழுது - 2 டேபிள் ஸ்பூன் 

எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு தண்ணீர் - சிறிதளவு

செய்முறை:

சோயா சங்க்ஸ் பக்கோடா செய்வது எப்படி?
சோயா சங்க்ஸை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைத்துப் பிழிந்து எடுக்கவும். 

தேவையானவற்றில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய், தண்ணீர் தவிர, மற்ற அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும். 

கலவை கெட்டியாக இருந்தால் சிறிது தண்ணீர் தெளித்து நன்கு கலந்து விடவும். 

வாணலியில் எண்ணெய் சேர்த்துக் காய்ந்ததும், மாவை சிறிது சிறிதாகக் கிள்ளி எடுத்து எண்ணெயில் சேர்த்து நன்கு வேக விட்டுப் பொரித்தெடுக்கவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)