நெத்திலி கருவாடு என்றாலே எந்த உணவுக்கும் பொருத்தமாக இருக்கும். அதன் மொறு மொறு சுவை எவ்வளவு சாப்பிட்டாலும் திருப்தியாகாது.

மொறு மொறு சுவையில் நெத்திலி கருவாடு வறுவல்
அந்த அளவிற்கு சுவை மிகுந்தது. நெத்திலி மீனில் கால்சியம் வளமாக நிறைந்துள்ளது. இது பற்கள் மற்றும் எலும்புகளுக்கு மிகவும் அத்தியாவசியமான ஓர் சத்து.
கிரெடிட் கார்டு தவறாகப் பயன்படுத்தப்பட்டால் என்ன செய்வது?
அது மட்டுமின்றி இதில் எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வைட்டமின் ஏ சத்தும் நிறைந்து உள்ளது. 

நெத்திலி கருவாடை எப்படி பக்குவமாக மொறு மொறுவென வறுப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

நெத்திலி கருவாடு - கையளவு

மிளகாய் தூள் - 1 tsp

மஞ்சள் தூள் - 1/2 tsp

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - வறுக்க தேவையான அளவு
கிச்சனில் பாத்திரம் கழுவும் தொட்டியை மின்ன வைக்க !
செய்முறை :
கருவாட்டின் தலையை நீக்கி சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின் சுடுதண்ணீர் வேக வைத்து அந்த தண்ணீரில் கருவாடை மூழ்க வைத்து ஊற வையுங்கள்.

2 நிமிடங்கள் ஊற வேண்டும். மாலை நேரத்தில் சூடாக சாப்பிட வெண்ணெய் புட்டு : எளிமையான முறையில் உடனே செய்யலாம்

2 நிமிடங்கள் கழித்து அதில் இருக்கும் மண், தேவையற்ற உறுப்புகளை நீக்கி விடுங்கள்.
கால் நரம்பு முடிச்சை (வெரிகோஸ் நரம்பு முடிச்சி) எவ்வாறு குணப்படுத்தலாம்?
தோலையும் விரலால் சுரண்டி நீக்கிக் கொள்ளுங்கள். பின் 2 முறை அலசுங்கள். இதனால் மண் இல்லாமல் சுத்தமாக இருக்கும். சுத்தம் செய்ததும் தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

அடுத்ததாக பாத்திரத்தில் குழம்பு மிளகாய் தூள், மஞ்சள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்தில் கலந்து கொள்ளுங்கள்.
பின் கருவாடை சேர்த்து உடையாமல் பக்குவமாக மசாலாவுடன் பிறட்டுங்கள். முற்றிலும் மசாலா கலந்திருக்க வேண்டும்.

பின் கடாயில் எண்ணெய் ஊற்றி காயந்ததும் கருவாடை போட்டு பிரட்டி எடுங்கள். பிரட்டும் போது உடையாமல் பிரட்டுங்கள். 
நீங்கள் கட்டிய வீடு பாதுகாப்பாக உள்ளதா?
கருவாடு மொறு மொறுவென வர கருவாடு லேசாக வெடிப்பது போல் வரும். அதுவரை வறுத்துக் கொண்டே இருங்கள்.