Recent

featured/random

டேஸ்டியான வெஜிடபிள் முட்டை ரோல் செய்வது எப்படி?

0

மாலையில் பள்ளி முடிந்து வீட்டிற்கு பசியோடு வரும் குழந்தைகளுக்கு, நல்ல ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து தர ஆசையா? அப்படியானால், அதற்கு ரோல் சரியானதாக இருக்கும். 

வெஜிடேபிள் முட்டை ரோல் செய்வது எப்படி?
எந்த உணவை செய்து கொடுத்தாலும் விரும்பி சாப்பிடுவது இல்லை என்று பல தாய்மார்கள் சொல்ல கேட்டிருப்போம். 

இனி அந்த கவலை வேண்டாம் அதிலும் வெஜிடபிள் முட்டை ரோல் செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். 

குறிப்பாக அலுவலகத்திற்கு செல்வோருக்கு ஏற்ற ரெசிபி. சரி ஆரோக்கியமான வெஜிடபிள் முட்டை ரோல் டிஸ்  எப்படி செய்வது என்று இங்கு நாம் காண்போம்.

தேவையான பொருட்கள்:

சப்பாத்தி – 1

உருளைக்கிழங்கு – 1 (வட்டமாக மற்றும் நைசாக நறுக்கியது)

கத்திரிக்காய் – 1 (துண்டாக நறுக்கியது)

முட்டை 2 – (மிக்சியில் நன்றாக அடித்துக் கொள்ளவும்)

வெங்காயம் 1 – (பொடியாக நறுக்கியது)

பச்சை மிளகாய் 1 – (பொடியாக நறுக்கியது)

மிளகாய் தூள் 1/4 டீஸ்பூன்

மஞ்சள் தூள் 1 – சிட்டிகை

முட்டைகோஸ் 2-3 டேபிள் ஸ்பூன் (துருவியது)

தக்காளி மற்றும் சில்லி சாஸ் – தேவையான அளவு

எண்ணெய் 2 – டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு.

செய்முறை

டேஸ்டியான வெஜிடேபிள் முட்டை ரோல்

வெஜிடபிள் முட்டை ரோல் செய்வதற்கு முதலில் கடாயில் கொஞ்சம் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் அவற்றில் நறுக்கிய உருளைக்கிழங்கை போட்டு நன்றாக வதக்கவும்.

அதன் பின்பு அவற்றில் நறுக்கிய கத்திரிக்காயை போட்டு நன்றாக வதக்கவும். 

கத்திரிக்காய் நன்றாக வதங்கியதும் அவற்றில் நறுக்கி வைத்திருக்கும் பச்சை மிளகாய் மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக கிளரி விட வேண்டும்.

அதன் பிறகு மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் முட்டைகோஸ் ஆகியவற்றையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். 

இவை அனைத்தும் நன்றாக வதங்கிய பிறகு அடித்து வைத்திருக்கும் முட்டையை இவற்றில் சேர்த்து நன்றாக கிளரி இறக்க வேண்டும்.

பின்பு சப்பாத்தியின் மேல் இந்த கலவையை வைத்து அதன் மேல் தக்காளி மற்றும் சில்லி சாஸை ஊற்றி ரோல் செய்தால் சுவையான மற்றும் ஆரோக்கியமான வெஜிடபிள் முட்டை ரோல்  தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(300)

Our website uses cookies to enhance your experience. Check Now
Accept !