குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்வது எப்படி?





குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்வது எப்படி?

0

பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் உலகம் முழுவதும் மிகவும் பிரபலமாக இருக்கும் ஒரு மாலை நேர சிற்றுண்டி. இவை பெரும்பாலும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு மாலை நேர சிற்றுண்டி. 

பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் - Potato Garlic Rings
குறிப்பாக இளம் தலைமுறையினர் மத்தியில் இதற்கு இருக்கும் வரவேற்பே தனி தான். இதன் அசத்தலான சுவை மற்றும் மொறு மொறுப்பான தன்மையே இதற்கு முக்கிய காரணம். 

பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்ஸின் ஸ்பெஷல் என்ன வென்றால் இதை வெகு எளிதாக எந்த ஒரு சிரமமுமின்றி குறைந்த நேரத்திலேயே நாம் செய்து விடலாம். 

அது மட்டுமின்றி இவை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செய்யக் கூடியவை. மேலும் இதை செய்வதற்கும் குறைந்த பொருட்களே தேவைப்படும். 

ஸ்கூலில் இருந்து வரும் நம் குழந்தைகளுக்கு பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்ஸை செய்து கொடுத்தால் அவர்கள் இதை மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.

இப்பொழுது அட்டகாசமான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று காண்போம் வாருங்கள்.

தேவையான பொருட்கள்

ரவை - ½ கப் 

உருளைக்கிழங்கு - 2 

சோள மாவு - 2 மேஜைக்கரண்டி 

பூண்டு - 3 பல்

சில்லி ஃப்ளேக்ஸ் - 1 மேஜைக்கரண்டி 

சாட் மசாலா - ¼ மேஜைக்கரண்டி 

வெண்ணெய் - 2 மேஜைக்கரண்டி 

எண்ணெய் - தேவையான அளவு 

உப்பு - தேவையான அளவு 

கொத்தமல்லி - சிறிதளவு 

செய்முறை

குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ்

முதலில் பூண்டு மற்றும் கொத்த மல்லியை நன்கு பொடியாக நறுக்கி எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான சூட்டில்  அதில் உருளைக்கிழங்கை வேக வைப்பதற்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 

அதில் உருளைக்கிழங்கை போட்டு அதை சுமார் 20 லிருந்து 25 நிமிடம் வரை வேக விடவும்.

பிறகு அதை ஒரு பாத்திரத்தில் வைத்து ஆற விட்டு பின்பு அதை எடுத்து ஒரு bowl ல் வைத்து நன்கு ஒரு கரண்டியின் மூலம் மசித்து விடவும். 

(தண்ணீர் இதில் சேர்ந்து விடாமல் பார்த்து கொள்வது மிகவும் அவசியம்.)

இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் ரவையை கொட்டி அதை நன்கு நைசாக அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு pan ஐ மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் 2 மேஜைக்கரண்டி அளவு வெண்ணெய் சேர்த்து உருக விடவும்.

வெண்ணெய் உருகியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் பூண்டை போட்டு பூண்டின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.

பூண்டின் பச்சை வாசம் போனதும் அதில் சில்லி ஃப்ளேக்ஸ்ஸை போட்டு  அரை நிமிடம் வரை அதை வதக்கவும்.

பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து விட்டு அதை கொதிக்க விடவும். (சுமார் அரை கப் அளவு தண்ணீர் சேர்த்தால் சரியாக இருக்கும்.)

அது நன்கு கொதிக்க ஆரம்பித்தவுடன் அடுப்பை முற்றிலுமாக குறைத்து வைத்து அதில் நாம் நைசாக அரைத்து வைத்திருக்கும் ரவையை போட்டு அதை நன்கு கலந்து விடவும். 

பின்னர் அதில் நாம் வேக வைத்து மசித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு மற்றும் சாட் மசாலாவை போட்டு அதை நன்கு கலந்து கீழே இறக்கி வைத்து ஆற விடவும். 

(சாட் மசாலாவை விரும்பாதவர்கள் அதை தவிர்த்து விடலாம்.)

பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கொத்தமல்லி மற்றும் சோள மாவை போட்டு நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

பிறகு ஒரு கிண்ணத்தில் சிறிதளவு சோள மாவை கொட்டி வைத்து கொள்ளவும்.

அடுத்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து வைத்திருக்கும் உருளைக்கிழங்கு கலவையை எடுத்து சப்பாத்தி கல்லில் வைத்து நன்கு அனைத்து சமமாக தேய்க்கவும்.

பின்பு ஒரு பெரிய சைஸ் டம்ளர் மற்றும் அதற்கு அடுத்த சைஸ் சின்னதாக இருக்கும் டம்ளரை எடுத்து கொள்ளவும்.

பின்னர் நாம் தேய்த்து வைத்திருக்கும் மாவில் முதலில் பெரிய டம்ளரை வைத்து அச்சி ஏற்படுத்தவும், 

குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் செய்வது எப்படி?
பின்பு சிறிய சைஸ் டம்ளரை நாம் ஏற்படுத்திய அச்சின் உள்ளே வைத்து இன்னொரு அச்சியை ஏற்படுத்தி அதில் வரும் ரிங்ஸ்ஸை எடுத்து ஒரு தட்டில் வைத்து கொள்ளவும்.

இவ்வாறு மீதமுள்ள ரிங்ஸ்களை செய்து எடுத்து ஒரு தட்டில் தயாராக வைத்து கொள்ளவும்.

இப்பொழுது ஒரு கடாயை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதை சுட வைக்கவும்.

அதில் நாம் செய்து வைத்திருக்கும் ரிங்ஸ்களை போட்டு பொன்னிறமாக பொரித்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறவும்.

இப்பொழுது உங்கள் சூடான மற்றும் மொறு மொறுப்பாக இருக்கும் பொட்டேட்டோ கார்லிக் ரிங்ஸ் தயார்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)