கத்திரிக்காய் உண்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?





கத்திரிக்காய் உண்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன தெரியுமா?

0

நமது நாட்டு மக்களின் ஒவ்வொரு நேர உணவின் போதும் பல வகையான காய், கீரைகள் போன்றவற்றை துணை உணவாக கொண்டு சாப்பிடுவது பல காலமாக பின்பற்றப்படும் ஒரு வழக்கமாகும். 

கத்திரிக்காய் உண்பதால் உண்டாகும் நன்மைகள் என்ன
அப்படி நம் நாட்டு மக்கள் சாப்பிடுவதற்காக பல காய்கள் நமது நாட்டில் விளைகின்றன. அதில் ஒன்று தான் கத்திரிக்காய். 

இந்த கத்திரிக்காய் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதை தெரிந்து கொள்ளலாம்.

நரம்புகளுக்கு வலுவூட்டவும்

நரம்புகளுக்கு வலுவூட்டவும்

இதில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக்கும். கத்திரிக்காயில் வைட்டமின் சி, மற்றும் இரும்புச்சத்து உள்ளது. 

கத்திரிக்காய் நரம்புகளுக்கு வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் செய்கிறது. 

மலச்சிக்கல் 

மலச்சிக்கல்

நீர் அதிகம் அருந்தாமை, உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறை போன்ற காரணங்களால் இன்று பலரும் மலச்சிக்கல் பிரச்சனையால் அவதியுறுகின்றனர். 

கத்திரிக்காய் கூட்டு, பொரியல் போன்ற பதார்த்தங்களாக செய்து சாப்பிட்டு வருபவர்களுக்கு செரிமான கோளாறுகள் நீங்கும். உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து மலச்சிக்கல் பிரச்சனையையும் நீக்கும்.

சிறுநீரக கற்கள் 

சிறுநீரக கற்கள்

முதல்கட்ட சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் வல்லமை பெற்றது. தண்ணீர் அதிகம் அருந்தாமை, உப்பு தன்மை அதிகமாக இருக்கும் நீரை குடிப்பது போன்ற காரணங்களால் இன்று பலருக்கும் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகிறது. 

கத்திரிக்காய் அடிக்கடி பக்குவம் செய்து சாப்பிட்டு வந்தால் சிறுநீரக கற்கள் கரைந்து, சிறுநீரகங்களின் நலம் காக்கப்படும்.

உடம்பில் அரிப்பு

உடம்பில் அரிப்பு

போட்டோ நியூட்ரியெண்ட்ஸ் இருப்பதால் நினைவாற்றல் அதிகரிக்கும். இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் கொழுப்பைக் கரைக்கும். 

உடல் பருமனைக்  குறைக்கும். மூளை செல்களைப் பாதுகாக்கும். கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது. 

முற்றிய பெரிய காய்களைச் அதிக அளவு சாப்பிட்டால் தான் உடம்பில் அரிப்பு ஏற்படும். 

மூலம் 

மூலம்

அதிகம் காரமான உணவுகளை உண்பது, தொடர்ந்து ஒரே இடத்தில் நீண்ட நேரம் அமர்ந்து பணிபுரிவது, நாட்பட்ட மலச்சிக்கல் போன்றவற்றால் மூலம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் ஏற்படுகிறது. 

எப்படிப்பட்ட மூல நோயையும் வாரத்திற்கு இரண்டு முறை கத்திரிக்காயை சமைத்து உண்டு வருவதால் மூல நோய்களில் இருந்து நல்ல நிவாரணம் கிடைக்கும்.

சுவாசக் கோளாறுகள் 

சுவாசக் கோளாறுகள்

நாம் அன்றாடம் சுவாசிக்கும் காற்றில் கண்ணனுக்கு தெரியாத நுண்கிருமிகளும், மாசுகளும் அதிகம் இருக்கின்றன. 

இவை எல்லாம் நாம் சுவாசிக்கும் போது நமது நுரையீரல்களுக்கு சென்று விடுகிறது. 

கத்திரிக்காய் அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வருபவர்களுக்கு நுரையீரல் தூய்மையடையும், சுவாச பிரச்சனைகளும் நீங்கும்.

புற்றுநோய்

புற்றுநோய்

புற்றுநோய் வராமல் காக்கும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. 

ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன. இவற்றை ஈடுசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதய நோய்கள் வருவதைத் தடுக்கும். 

உடல் எடை குறைப்பு 

உடல் எடை குறைப்பு

கட்டுப்பாடில்லாமல் எந்த வகையான உணவுகளையும் உண்பது, சரியான உடற்பயிற்சி மேற்கொள்ளாமல் இருப்பது போன்றவை உடல் பருமன் ஏற்படுவதற்கு அதிகம் காரணமாக இருக்கிறது. 

உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வரம் இரண்டு அல்லது மூன்று முறை கத்திரிக்காய் விரைவாக உடல் எடையை குறைக்க முடியும்.

பசியின்மை

பசியின்மை

உடலில் சேர்ந்த அதிகப்படியான இரும்புசத்தை சமன்படுத்தும். நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக்  கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. 

பசியின்மை அகல்கிறது. உடல் வலுவு குறைவது தடுக்கப்படுகிறது. மூச்சு விடுதலில் சிரமம், தோல் மரத்து விடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது. 

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

டைப் 2 சர்க்கரை நோயைத் தடுக்கும். முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். 

காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. உயர் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, மன அமைதியைத் தரும். 

ஊட்டச்சத்து 

ஊட்டச்சத்து மிக்க கத்திரிக்காய்

கத்திரிக்காய் உடல் நலத்திற்கு தேவையான பல சத்துகளை தன்னுள் கொண்டுள்ளது. இதில் வைட்டமின் சி, ஈ சத்துகள், இரும்புசத்து, பாஸ்பரஸ் போன்ற பல சத்துகள் இருக்கின்றன 

இவை அனைத்தும் உடலின் எலும்பு வளர்ச்சி மற்றும் உறுதி, இதயம், ரத்தம் நரம்புகளின் சீரான இயக்கம் என ஒட்டு மொத்தமான உடலின் நலனுக்கு உதவுகிறது.

முடிவு

உடலுக்குச் சூடு தரும் காய்

உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது  நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)