வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?





வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?

0

வேர்க்கடலை பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது. இதனால், அவர்களுக்கு மார்பகக் கட்டி ஏற்படுவதையும் தடுக்கிறது. 

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி?
போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம், துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் ஆகியவை நிலக்கடலையில் நிறைந்துள்ளன. 

உடல் எடை அதிகமாகாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வேர்க்கடலை சாப்பிடலாம். 

பொதுவாக பாதாம், பிஸ்தா, முந்திரி பருப்புகளில் தான் சத்து அதிகம் உள்ளது என்று அனைவரும் எண்ணுகிறார்கள். 

ஆனால், நிலக்கடலையில் தான் இவற்றை யெல்லாம் விட சத்துக்கள் உள்ளன. நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும்.

இத்தகைய நல்ல சத்துக்களை கொண்ட வேர்க்கடலையில்  வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

வேர்க்கடலை ரவை - ஒரு கப் (வேர்க்கடலையை ரவை போல பொடித்துக் கொள்ளவும்),

கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு - தலா ஒரு டீஸ்பூன்,

தேங்காய் துருவல் - கால் கப்,

காய்ந்த மிளகாய் - 3,

கோதுமை ரவை - அரை கப்,

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.

செய்முறை

வேர்க்கடலை கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை

கடாயில் 2 டீஸ்பூன் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு தாளித்து, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும். 

கறிவேப்பிலை, கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். பிறகு இதில் தேவையான தண்ணீர் விட்டு, உப்பை போட்டு கொதிக்க விடவும். 

நன்றாக கொதிக்க ஆரம்பித்ததும் தேங்காய் துருவல், வேர்க்கடலை ரவை, கோதுமை ரவையைப் போட்டு 2 நிமிடம் கிளறவும்.

பிறகு அடுப்பிலிருந்து இறக்கி சிறிது நேரம் ஆறியதும், கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு சிறு சிறு உருண்டைகளாகப் பிடித்து இட்லி தட்டில் வைத்து 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும். 

வேர்க்கடலை ரவை-கோதுமை ரவை பிடி கொழுக்கட்டை ரெடி. 

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)