சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா செய்வது எப்படி?

சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா செய்வது எப்படி?

0

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகைகளிலும் பல்வேறு வித நன்மைகள் இருக்கிறது.  சில உணவுகளில் அதிக ஊட்டசத்துக்கள் இருக்கும். சிலவற்றில் மிக சில சத்துக்களே இருக்கும். 

இறால் கிரீன் மசாலா

ஆனால், ஒரு சில உணவுகளில் மட்டுமே மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும். மீன் முதல் சிறு கடற்பாசி வரை எல்லாவற்றிலும் நிறைய சத்துக்கள் இருக்கின்றன. 

இறால் ஒரு முக்கிய கடல் உணவாகும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதனை விரும்பி உண்ணுவார்கள். இவற்றில் பல வித ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது.

இறாலில் குறைந்த அளவே கொழுப்புகள் உள்ளது. எனவே இவை டயட் உள்ளவருக்கு சிறந்த உணவாக இருந்து நலமான உடலை தரும். 

சீனர்களின் மருத்துவத்தில் இந்த இறாலை ஆண்களின் பிரச்சினைகளை குணப்படுத்த பயன்படுத்துவார்களாம். 

குறிப்பாக ஆண்மை குறைவு ஏற்பட்டுள்ள ஆண்களுக்கு இறால் அற்புத மருந்தாகும். பிறப்புறுப்பின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி இல்லற வாழ்வில் நலம் பெற இவை செய்கிறது.

இத்தகைய அற்புத குணம் உடைய இறால் கொண்டு மிகவும் சுவையான இறால் கிரீன் மசாலா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

இறால் - கால் கிலோ

நறுக்கிய இஞ்சி - சிறிதளவு

நறுக்கிய பூண்டு - 4 பல்

பச்சை மிளகாய் - 2

பெ.வெங்காயம் - 2 (நறுக்கவும்)

கொத்தமல்லி தூள் - கால் டீஸ்பூன்

சீரகத்தூள் - 1/2 டீஸ்பூன்

தண்ணீர் - 2 கப்

தேங்காய் பால் - கால் கப்

எலுமிச்சை சாறு - சிறிதளவு

உப்பு, எண்ணெய் - தேவைக்கு

புதினா - 1 கட்டு

கொத்தமல்லி தழை - ஒரு கைப்பிடி

செய்முறை:

சப்பாத்திக்கு அருமையான இறால் கிரீன் மசாலா

இறாலை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன் எலுமிச்சை சாறு, உப்பு கலந்து ஊற வைத்துக் கொள்ளவும்.

மிக்சியில் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி தழை, மிளகாய், கொத்தமல்லி தூள், சீரகத்தூள் போன்றவற்றை கொட்டி விழுதாக அரைத்துக்கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் வெங்காயத்தை கொட்டி பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும். அதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த கலவையை கொட்டி கிளறவும்.

பின்னர் அடுப்பை சிறுதீயில் வைத்து விட்டு தேங்காய் பால் ஊற்றி கொதிக்க விடவும். நன்கு கொதிக்க தொடங்கியதும் இறால் கலவையை கொட்டி உப்பு, தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

ஓரங்களில் எண்ணெய் பிரிந்து கிரேவி பதத்துக்கு வரும் வரை வேக வைத்து விட்டு இறக்கி பரிமாறலாம். சுவையான இறால் கிரீன் மசாலா ரெடி.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)