ஊட்டச்சத்து மிக்க பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி?





ஊட்டச்சத்து மிக்க பசலைக்கீரை மக்ரோனி செய்வது எப்படி?

0

இரவு உணவு என்பது பொதுவாக லைட்டாக இருப்பது நன்மை தரும். அதுவே ஊட்டச்சத்துடன் இருந்தால் மிகவும் நல்லது. 

ஊட்டச்சத்து மிக்க பசலைக்கீரை மக்ரோனி செய்வது
ஆகவே இன்று உங்களுக்கு எளிய முறையில் ஒரு லைட்டான அதே சமயத்தில் ஊட்டச்சத்தான உணவை வழங்குகிறோம். அதன் பெயர், க்ரீம் நிறைந்த பசலைக் கீரை மக்ரோனி.

பசலைக் கீரையில் பெரும் அளவில் வைட்டமின் சத்துக்கள் உள்ளன, சுண்ணாம்புச்சத்து உள்ளது, இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களுக்கு உதவும் ஹிமொகுளோபின் உள்ளது. 

வைட்டமின் சத்துக்கள் ‘ஏ’, ‘பி’, ‘சி ‘ ஆகியனவும், பொட்டாசிய உப்பின் காரச்சத்தும் ஏராளமாக உள்ளன. ஆனால் கொழுப்பு சத்து கிடையாது. 

இந்தக் கீரை சாப்பிடும் போது தாது கெட்டி படும். மூளைக்கு சக்தியைக் கொடுக்கும். இந்த ரெசிபி செய்வதற்கு மிகவும் எளியது. 

ஆனால் இந்த உணவில் இரும்பு சத்தும் வைட்டமின் சத்தும் அதிகமாக உள்ளன. மேலும் இதன் சுவையும் அற்புதமானது.

தேவையான பொருள்கள்

மக்ரோனி - 2 கப்

ஆலிவ் எண்ணெய் - 2 தேக்கரண்டி

பூண்டு பற்கள் - (பொடியாக நறுக்கியது)

சின்ன வெங்காயம் - 4 (பொடியாக நறுக்கியது) 

தக்காளி - 1 பொடியாக நறுக்கியது)  

காளான் (நறுக்கியது)

(கீரை) - 1 கட்டு

டையட் மயோனிஸ் - 5 தேக்கரண்டி

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை

ஊட்டச்சத்து மிக்க பசலைக்கீரை மக்ரோனி

ஒரு அடி கனமான பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். அந்த நீரில் உப்பு சேர்த்து மக்ரோனியை போட்டு வேக வைக்கவும்.

5 நிமிடங்கள் வேக விடவும். அவ்வப்போது அடியில் மக்ரோனி தங்காமல் இருக்க கிளறி விடவும். 5 நிமிடத்திற்கு பிறகு, மக்ரோனியை வடிகட்டி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

வடிகட்டி எடுத்து வைத்த நீரில் 120மிலி தண்ணீரை தனியே எடுத்து வைத்து கொள்ளவும்.

இதனை பிறகு பயன்படுத்த வேண்டும். நான்ஸ்டிக் கடாய் ஒன்றை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றவும்.

எண்ணெய் காய்ந்தவுடன், பூண்டு மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியவுடன், அதில் தக்காளியை சேர்க்கவும். தக்காளி வெந்தவுடன், காளான் மற்றும் கீரையை சேர்க்கவும்.

2 - 3 நிமிடங்கள் நன்றாக வத்தக்கவும். கீரையில் இருக்கும் நீர் வெளியேறும். அதன் பின்பு, சிறிதளவு மிளகு தூள் மற்றும் உப்பு சேர்க்கவும். 

மக்ரோனி வேக வைத்து வடிகட்டி எடுத்து வைக்கப்பட்ட நீரை இப்போது இந்த கலவையில் சேர்க்கவும். நன்றாக கிளறவும். 

தற்போது அடுப்பில் இருந்து கடாயை இறக்கி, மயோனிஸ் சேர்த்து நன்றாக கிளறவும். பின்பு மறுபடி, அடுப்பில் வைத்து கிளறவும்.

1 நிமிடத்தில் சாஸ் சற்று கெட்டியாக மாறும். இந்த நேரத்தில் மக்ரோனியை கலந்து நன்றாக கிளறி விடவும். 10. க்ரீம் நிறைந்த பசலைக் கீரை மேக்ரோனி தயார். கொத்துமல்லி,

கேரட் துருவல் போன்றவற்றால் அலங்கரித்து பரிமாறலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)