பட்டர் ரோஸ் குக்கீஸ் செய்வது எப்படி?





பட்டர் ரோஸ் குக்கீஸ் செய்வது எப்படி?

0

பழங்காலத்திலிருந்து இன்றுவரை பயன்படுத்தப்படும் ஒரு அற்புத பொருள் தான் வெண்ணெய். இதனை பட்டர் என்று அழைக்கப் படுகின்றது. இதில் விட்டமின் ஏ, இருப்பதால் பார்வை குறைபாடு கண்நோய் நீங்கும். 

பட்டர் ரோஸ் குக்கீஸ்

பி 12 வைட்டமின்களினால் இரத்த சோகை வராமல் தவிர்க்கிறது, உடல் எரிச்சலையும் குறைக்கிறது.

பட்டரில் உள்ள ஆரோக்கியமான கொழுப்பு உடலுக்குத் தேவையான எனர்ஜியைக் கொடுப்பதோடு மெட்டபாலிசத்தைத் தூண்டுகிறது. இதனால் உடல் எடை வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.

 பட்டர் டீயில் அதிக அளவில் காஃபைன் நிறைந்திருக்கிறது. இது உடலுக்குத் தேவையான முழு எனர்ஜியையும் கொடுக்கிறது.

பொதுவாக பிஸ்கட் என்றாலே அனைவருக்கும் பிடிக்கும். குழந்தைகள் பிஸ்கட்டை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள். 

அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய இந்த பிஸ்கட்டினை வீட்டில் மிக எளிமையான இரண்டு செய்முறைகளில் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

அதுவும் கோதுமை மாவை பயன்படுத்தி தான் நாம் பிஸ்கட் செய்யப் போகிறோம். இந்த பட்டர் ரோஸ் பிஸ்கட்  செய்ய மிகவும் குறைவான பொருள்களே தேவைப்படும். 

இந்த கோதுமை பிஸ்கட்டை வீட்டில் நீங்கள் ஒரு முறை செய்தால் போதும் அனைவரும் மீண்டும் மீண்டும் வேண்டும் என்று விரும்பி சாப்பிடுவார்கள்.

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு - 1 கப்

பொடித்த சர்க்கரை - 1/4 கப் 

எண்ணெய் - 1/2 கப்

உப்பு - 1/4 தேக்கரண்டி

செய்முறை :

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை உப்பு சேர்த்து அதனுடன் எண்ணெய் ஊற்றி கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சலித்த மாவை சேர்த்து நன்கு பிசையவும். 

ஒரு தட்டில் எண்ணெய் தடவி சிறிது மாவை தூவி வைக்கவும். இதனை பைப்பிங் பேக்கில் வைத்து பிழியவும்.

5 நிமிடம் சூடு செய்த குக்கரில் ஒரு ஸ்டாண்ட் போட்டு அதன் மேல் தட்டை வைத்து மூடியால் மூடி குறைந்த தீயில் வைத்து 30 நிமிடம் வேக விடவும் (மூடியில் கேஸ்கட், வெயிட் போட கூடாது)

பட்டன் ரோஸ் குக்கீஸ் தயார்

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)