மினி மில்க் குக்கீஸ் செய்வது எப்படி?





மினி மில்க் குக்கீஸ் செய்வது எப்படி?

0

புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. 

மினி மில்க் குக்கீஸ்

பிறந்த குழந்தை முதல் வயதானவர் வரை எல்லோருக்கும் பால் அவசியம். ஸ்கிம்ட் அல்லது டோன்டு மில்க் என்று கூறப்படும் கொழுப்பு நீக்கப்பட்ட பால் ஆரோக்கியமான தேர்வு அல்ல. 

அதற்கு மாறாக முழு கொழுப்பு நிறைந்த பால் தான் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்று கண்டறியப் பட்டுள்ளது.பால் பவுடர் எளிதில் கிடைக்கக் கூடியது.  

லாக்டிக் அமிலம் நிறைந்து இருக்கும் இந்த பால் பவுடர் சருமத்திற்கு பல நன்மைகளை தருகிறது. முகப்பருக்களை அகற்றும். சருமத்தை சுத்தப்படுத்தும். இறந்த செல்களை நீக்கும். 

முகத்தை மிருதுவாக்கும். முகப்பரு தழும்புகளும் மறைந்து போகும். வெயிலினால் உண்டாகும் கருமை, அலர்ஜி ஆகியவற்றை போக்கி சருமத்திற்கு நிறம் தரும். 

இத்தகைய நன்மை தரும் பால் பவுடர் கொண்டு மினி மில்க் குக்கீஸ் செய்வது எப்படி? என்று காண்போம்.

தேவையான பொருட்கள்

சோள மாவு - கால் கப் 

மைதா - 2 டேபிள் ஸ்பூன் 

பால் பவுடர் - 2 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை பொடி - 2 டேபிள் ஸ்பூன் 

பேக்கிங் பவுடர் - கால் டீஸ்பூன் 

வெனிலா எசன்ஸ் - ஒரு டீஸ்பூன் 

பால் - 2 டீஸ்பூன் 

வெண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெய் - ஒரு டேபிள் ஸ்பூன் 

செய்முறை     :

மினி மில்க் குக்கீஸ் செய்வது எப்படி?
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பவுலில் மைதா, பொடித்த சர்க்கரை, பால் பவுடர், சோள மாவு, வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர், பால், வெண்ணை அல்லது எண்ணெய் எல்லாவற்றையும் சேர்த்து வைக்கவும்.

இப்பொழுது அதை மெதுவாக கை விரல்களினால் கலந்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசையவும். இந்த மாவை லேசாக உருட்டி வைத்து சிறிய சிறிய உருண்டைகளாக கட் செய்து வைக்கவும்.

இப்பொழுது அதை உருட்டி லேசாக அழுத்தி எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் இடைவெளி விட்டு வைக்கவும்.

இப்பொழுது அதை அவனில் வைத்து 15 அல்லது 20 நிமிடம் பேக் செய்து எடுக்கவும். குட்டி பால் பிஸ்கட் ரெடி. இதை குழந்தைகளுக்கு கொடுத்து அவர்களை குஷிபடுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)