கூழ் வற்றல் மசாலா செய்வது எப்படி?

கூழ் வற்றல் மசாலா செய்வது எப்படி?

0

தேவையானவை:  

கூழ் வற்றல் - 25, 

பெரிய வெங்காயம் - 2, 

தக்காளி -  1, 

மிளகாய் தூள் -  ஒன்றே கால் டேபிள் ஸ்பூன், 

மல்லித் தூள் - அரை டேபிள் ஸ்பூன், 

தூள் உப்பு - தேவைக்கேற்ப, 

கரம் மசாலா தூள் - கால் டேபிள் ஸ்பூன், 

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை, 

சோம்பு - அரை ஸ்பூன், 

எண்ணெய் - 6 டேபிள் ஸ்பூன், 

தக்காளி சாஸ் - 1 டீஸ்பூன்.

செய்முறை:  

கூழ் வத்தல் மசாலா

வெங்காயத்தை மெல்லிசாக நீளவாக்கிலும் தக்காளியைப் பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும். 

கூழ் வற்றலை சுடு தண்ணீரில் வேக வைத்து, பின் உப்பு சேர்த்து 5 நிமிடங்களில் நீரை வடித்து விடவும். வாணலியில் எண்ணெயைச் சுட வைத்து 

சோம்பு போட்டு தாளித்து பெரிய வெங்காயம் + தக்காளி சேர்த்து வதக்கியதும், அதில் மிளகாய்தூள், மல்லித்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கிளறவும். 

அடுப்பை குறைந்த தணலில் வைக்கவும். பொடிகளின் பச்சை வாடை போனதும் வற்றலை அத்துடன் சேர்த்து கிளறி இறக்கி, 1 ஸ்பூன் தக்காளி சாஸ் விட்டு கிளறி பரிமாறவும். 

அருமையான சைட் டிஷ் இது.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)