சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா செய்வது எப்படி?





சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா செய்வது எப்படி?

0
பரோட்டா வகைகளில் சற்று மாற்றத்துடன் செய்யப்படுவது பிரக்கோலி பரோட்டா ஆகும். காய்கறிகளை உள்ளே வைத்து மாவை திரட்டாமல், காயை மிருதுவான பேஸ்ட் போல் செய்து மாவுடன் கலந்து பிசைந்து திரட்டி செய்வதாகும்.
சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா
எனவே இதை பரோட்டா என்பதா வெஜிடபிள் சப்பாத்தி என்பதா என்று தெரியவில்லை. பெயர் எதுவாக இருந்தாலும் சத்தான காய்கறிகளுடன் சாப்பிட எளிதான உணவாகும்.

பிரக்கோலி, ருசியான சுவையும் மொறுமொறுப்புத் தன்மையும் கொண்டது. எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களை தடுக்க பிரக்கோலியில் Sulfophane என்ற ஒரு கலவை உள்ளது. 

இது, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளில் இருந்து பாதுகாக்கும். கால்சியம் மற்றும் வைட்டமின் கே அளவு பிரக்கோலியில் அதிகம் உள்ளது. சரி இனி சுவையான சத்துமிக்க பிரக்கோலி பரோட்டா செய்வது எப்படி? என்று பார்ப்போம்.

தேவையானவை :

கோதுமை மாவு - 1.5 கிண்ணம்

மைதா மாவு – 1 மேசைக்கரண்டி

பிரக்கோலி – ½ பூ (முழு பூவில் பாதியளவு)

வெங்காயம் – ½ (அரைத்தது – விருப்பபட்டால்)

பூண்டு - 1 பல்

பச்சை மிளகாய் - 2

கரம் மசாலா – 1 சிட்டிகை

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

ஓமம் - 1/2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் – சுடுவதற்கு தேவையான அள்வு

செய்முறை
பிரகோலியை கழுவி துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். சிறிது தண்ணீரை கொதிக்க வைத்து உப்பு சேர்த்து 10 துண்டுகளை சேர்க்கவும்.

2 நிமிடங்கள் கழித்து பிரக்கோலியை எடுத்து மஞ்சள் தூள், பூண்டு, கரம் மசாலா, பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் மிருதுவாக அரைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, மைதா மாவு, அரைத்த விழுது, உப்பு சேர்க்கவும். தண்ணீர் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும். 

பிசைந்த மாவை சிறிது நேரம் மூடி வைக்கவும். சப்பாத்தி தேய்க்கும் அளவிற்கு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும். ஒவ்வொரு உருண்டையையும் சப்பாத்தி போல தேய்த்துக் கொள்ளவும். 

தோசை கல்லை சூடாக்கி பரோட்டாவை போடவும். பரோட்டாவின் மேல் எண்ணெய் அல்லது நெய் போடவும். இரண்டு பக்கமும் பிரவுன் கலர் மாறி வெந்த பின்னர் எடுக்கவும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)