வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு செய்வது எப்படி?





வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு செய்வது எப்படி?

0

வெள்ளரிக்காய் வெயிலுக்கு உகந்தது. அதே சமயம் இது பருவக்கால காய் என்பதால் தற்போது எளிதாகக் கிடைக்க கூடியது.

வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் நச்சுக்களை வெளியேற்றி, போதுமான நீர்ச்சத்துக்களை தக்க வைக்கும் அவசியமான வேலையை ஒரு வெள்ளரிக்காய் அன்றாடம் செய்கிறது.

வெள்ளரிக்காய் சத்துக்கள் மிகுந்த காயாகும். இது பல ஆபத்தான நோய்கள் வராமல் தடுக்கும். அன்றாடம் சாப்பிடும் உணவுகளின் கலோரியை எரிக்க வெள்ளரிக்காய் உதவுகிறது. 

வளர்சிதை மாற்றத்தை அதிகப்படுத்துகிறது. எனவே கலோரி அதிகரிக்காமல் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 

அதிக நீர்ச்சத்து கொண்டுள்ளதால், கொழுப்பு கார்போஹைட்ரேட் சத்துக்களை வேகமாய் ஜீரணித்து சக்தியாய் மாற்றிவிடும்.

குழந்தைகளுக்கு வெள்ளரிக்காய் பிடிக்குமானால், அவுகளுக்கு குழம்பு செய்து கொடுக்கலாம்.

வெள்ளரிக்காயை தோல் நீவி சாப்பிடுவதற்குப் பதிலாக, மதிய வேளையில் சாதத்தோடு சாப்பிடுவதற்கு ஏற்றவாறு பருப்பு வெள்ளரி குழம்பு செய்து சாப்பிட்டால் அற்புதமாக இருக்கும்.

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 1

தக்காளி - 2

பூண்டு - 4

துவரம் பருப்பு - 100 கிராம்

வெங்காயம் - 1

வரமிளகாய் - 2 

பச்சை மிளகாய் - 2

கடுகு - 1/2 தேக்கரண்டி

சீரகம் - 1/2 தேக்கரண்டி

எண்ணெய் - 1 மேசைக்கரண்டி

வெண்ணெய் - 1 மேசைக் கரண்டி

மஞ்சள் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

கொத்தமல்லி - சிறிதளவு

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

புளிச்சாறு - சிறிது

செய்முறை:

வெயிலுக்கு உகந்த வெள்ளரிக்காய் பருப்பு குழம்பு

வெங்காயம், கொத்தமல்லி, தக்காளி, ப.மிளகாய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும். வெள்ளரிக்காயை தோல் நீக்கிவிட்டு, துண்டுகளாக்கி கொள்ள வேண்டும்.

துவரம் பருப்பை நன்றாக கழுவி குக்கரில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு வேக வைத்துக் கொள்ள வேண்டும். 

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயத் தூள், வரமிளகாய் சேர்த்து தாளித்த பிறகு 

அதில் பூண்டு, வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். ‘வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மென்மையாகும் வரை வதக்கவும்.

அடுத்து அதில் வெள்ளரிக்காய் துண்டுகளை சேர்த்து சிறிது வதக்கி, தண்ணீர் சிறிது ஊற்றி, மூடி வைத்து மிதமான தீயில் வேக வைக்கவும்.

வெள்ளரிக்காய் ஓராளவு வெந்ததும், அத்துடன் வேக வைத்துள்ள பருப்பை சேர்த்து, அதோடு வெண்ணெயையும் சேர்த்து கிளறி, சிறிது புளிச்சாற்றினை சேர்த்து கொதிக்க விட்டு,

கொத்த மல்லியைத் தூவி இறக்கவும். சூப்பரான பருப்பு வெள்ளரிக்காய் குழம்பு தயார்!

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)