கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !





கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

0

எல்லாருக்கும் கொய்யா காய் என்றால் மிகவும் பிடிக்கும். பள்ளிக் காலங்களில் இதை அழகாக வெட்டி உப்பு காரத்துடன் தொட்டு சாப்பிடாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். 

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !
இது சுவையில் மட்டுமல்ல ஆரோக்கியத்திலும் தலை சிறந்தது. ரொம்ப சீப்பாக எப்போதும் கிடைக்கும் பழம் என்றால் அது கொய்யாப்பழம் தான். 

ஒரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் கொய்யா மரத்தின் இலை, காய், கனி பட்டை இப்படி எல்லாமே நமக்கு பயன்படக் கூடியது.

வீட்டுக்கு ஒரு கொய்யா மரம் வளர்த்தாலே போதும் உங்க பிணிகளை ஓட்டி விட முடியும். கொய்யா இலையில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் அனைத்தும் அடங்கியுள்ளன. 

காய்களை மட்டும் பறித்து விட்டு இலைகளை பயன்படுத்தாதவர்கள் தயவு செய்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த கொய்யா இலையில் டீ போட்டு குடித்தாலே நீங்கள் சகல நன்மைகளையும் பெற முடியும்.

முடி உதிர்வது

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

தலையில் ஏற்படும் அரிப்பிற்கு கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை ஸ்கால்ப்பில் படும்படி தடவி ஊற வைத்து  அலச  வேண்டும்.

கொய்யா இலையின் சாற்றினை வாரம் ஒரு முறை தலையில் தடவி ஊற வைத்து அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், முடி உதிர்வது,  முடி வெடிப்பு, பேன் தொல்லையில் இருந்து விடுபடலாம். 

கொய்யா இலையை 20 நிமிடங்கள் தண்ணீரில் கொதிக்க வைத்து குளிர்ந்த பிறகு தலையில் மசாஜ் செய்து வந்தால் முடி உதிர்வது நின்று  முடி பலம் பெறும். 

உடல் எடை

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

கொய்யா இலைகள் உணவில் உள்ள ஸ்டார்ச் சர்க்கரையாக மாறுவதை தடுக்கிறது. கல்லீரலில் இருக்கும் கார்போ ஹைட்ரேட்டை உடைத்து உடம்பு பயன்படுத்தி கொள்ளும் சேர்மங்களாக மாற்றி விடுகிறது. 

இதனால் தேவையில்லாமல் கலோரி கூடுவதில்லை. எடையும் கூடுவதில்லை. 

கார்போ உணவுகள் அதிக அளவில் எடுத்துக் கொள்கின்றவர்கள் இந்த கொய்யா இலை டீயை தினமும் இரண்டு முறை குடித்து வாருங்கள். 

ரத்தத்தின் சர்கு்கரை அளவும் கட்டுக்குள் இருக்கும். கார்போஹைட்ரேட் ஏற்படும் தாக்கத்தினயும் குறைத்து கொலஸ்ட்ராலை எரித்து, எடையைக் குறைக்கும்.

​நீரிழிவு நோயை கட்டுப்படுத்த

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

ஜப்பானின் யாகுல்ட் சென்ட்ரல் இன்ஸ்டிடியூட் நடத்திய ஆய்வின்படி, கொய்யா இலைகளால் தயாரிக்கப்படும் தேநீர் ஆல்பா-குளுக்கோசைடேஸ் என்சைம் செயல்பாட்டைக் 

குறைப்பதன் மூலம் டயாபெட்டீஸ் நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் கொண்டு வருகிறது. 

மேலும் உடல் சுக்ரோஸ், மால்ட்டோஸ் போன்ற இரத்த சர்க்கரையை கூட்டும் பொருட்கள் உறிஞ்சப்படுவதை தடுக்கிறது. 

எனவே இந்த அற்புதமான கொய்யா இலை டீயை 10-12 வாரங்கள் குடித்து வந்தால் இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க முடியும்.

கொழுப்பை குறைக்கும்

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

கொய்யா இலைகளை நன்கு கழுவி சுடு தண்ணீரில் கொதிக்க விட்டு தேநீர் போன்று குடித்து வந்தால் கொழுப்பை குறைக்கும்.  

நீரிழிவை  தடுக்கும், மேலும் வயிற்று போக்கினால் அவதிபடு பவர்களுக்கு சிறந்த சிகிச்சை யளிக்கவும். 

கொய்யா இலைசாறில் வயிற்று போக்குக்குக்கு  காரணமாக இருக்கும் ஏரொஸ் பாக்டீரியா வளர்ச்சி தடுக்கப் படுவதாவும் கண்டறியப் பட்டுள்ளது. 

வாய்ப்புண்

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

கொய்யா இலையை சாதாரணமாக வாயில் போட்டு மென்றும் அல்லது கொய்யா இலையில் டீ செய்து சாப்பிட்டு வந்தாலும்,  

வாயில்  ஏற்படும் பல் வலி, ஈறு பிரச்சனைகள். வாய்ப்புண் மற்றும் தொண்டைப் புண் ஆகியவற்றை உடனே சரி செய்கிறது. 

சரும அழகு

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

கொய்யா இலையை மிக்சியில் அரைத்து, அதனுடன் சிறுது தயிர் சேர்த்து முகத்தில் பூசி வரலாம். இதனை  தினமும் தூங்க செல்லும் முன் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். 

கொய்யா இலையை அரைத்து அதில் சிறிது ரோஸ் வாட்டர் கலந்து பயன்படுத்தினால் அது முக துவாரங்களில் உள்ள அழுக்கை  அப்புறப்படுத்தி உங்களை பளிச்சிட வைக்கும். 

கொய்யா இலைகளை அரைத்து அடிக்கடி முகத்திற்கு மசாஜ் செய்து வந்தால் முகப்பரு பிரச்சனை நீங்கும். உங்கள் சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள் நீங்கி இளமை பாதுகாக்கப்படும்.

எண்ணெய் சருமம் கொண்டவர்கள், கொய்யா இலைகளை பேஸ்ட் செய்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து, முகத்தில் தடவி வர வேண்டும். 

அரை மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவி விட வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.

ஜீரண சக்தியை மேம்படுத்த

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

வயிற்றில் வளரும் பாக்டீரியாக்களை செரிமான நொதிகளை உற்பத்தி செய்வதன் மூலம் தடுக்கிறது. இதனால் நச்சு விளைவிக்கும் குடல் பாக்டீரியாக்கள் கொல்லப் படுகின்றன. 

செரிமான நொதிகளின் உற்பத்தியை தூண்டி செரிமானத்தை மேம்படுத்துகிறது. 

உங்களுக்கு உணவு நச்சாக மாறும் போதோ, குமட்டல், வாந்தி போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டால் கொய்யா இலை டீ போட்டு குடியுங்கள் சரியாகி விடும். 

வயிற்று வலி வந்தால் கூட 6-7 கொய்யா இலைகளை 1.5 லிட்டர் நீரில் போட்டு கொதிக்க வைத்து ஒரு நாளைக்கு 2-3 வேளை குடித்து வாருங்கள். வலி படிப்படியாக குறைந்து விடும்.

​விந்தணுக்கள் உற்பத்தியை அதிகரிக்க

கொழுப்பை குறைத்து சரும அழகை மேம்படுத்தும் கொய்யா இலை !

நிறைய ஆண்களுக்கு போதுமான விந்தணுக்கள் இல்லாததால் கருத்தரிக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும். இதனால் கருத்தரிப்பு தள்ளிப் போட்டுக் கொண்டே வரும். 

ஆண்கள் தங்கள் விந்தணுக்கள் உற்பத்தியை பெருக்க கொய்யா இலைகளை டீ போட்டு குடிக்கலாம். இது விந்தணு உற்பத்தியை பெருக்கி சீக்கிரமே கருத்தரிக்க உதவுகிறது.

விந்தணுக்களின் எண்ணிக்கை மட்டுமல்லாது, விந்து உயிரணுக்கள் வலிமை இல்லாமல் இருந்தாலும் இந்த கொய்யா இலைகளை டீ போட்டு தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன் குடித்து வருவது நல்லது. 

உடல் பதட்டம் இல்லாமல் இருக்கின்ற வேளையில், உயிரணுக்கள் உற்பத்தி சீராகத் தூண்டப்படுவதற்கு உங்கள் உடல் ஒத்துழைக்கும். 

விந்து உயிரணுக்களின் எண்ணிக்கையும் சீராக அதிகரிக்கவும் வலிமையாகவும் தொடங்கும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)