குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று பிஸ்கட். பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. ஆனால் பிஸ்கட் வீட்டில் தயாரிக்கும் போது எந்த வித கெடுதலும் செய்யாத வகையில் தேவைக்கு ஏற்ப செய்ய முடியும்.
இனி குழந்தைகளுக்கு பிடித்த டைமண்ட் மசாலா பிஸ்கட் செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்
கோதுமை மாவு - ஒரு கப்
மைதா மாவு - ஒரு கப்
வர மிளகாய் - 3 அல்லது 4
பூண்டு - 6 பல்
ஓமம் - ஒரு டீஸ்பூன்
கருவேப்பிலை - 2 கொத்து
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
சமையல் எண்ணெய் - பொரிக்க போதுமான அளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
ஒரு அகலமான பாத்திரத்தில் மைதா மாவு, கோதுமை மாவு, தேவையான உப்பு, பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை மற்றும் அரைத்த மசாலா ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
நெய்யை சூடாக்கி மாவு கலவையில் சேர்த்து, நன்றாக நெய் பரவும் வரை மாவை கலக்கவும். பிறகு தேவையான நீர் விட்டு கெட்டியாக பிசைந்து கால் மணி நேரம் ஊற விடவும்.
பிறகு மாவை 3 பகுதியாக பிரித்து பந்துகளாக உருட்டிக் கொள்ளவும். உருட்டிய மாவை மெல்லிதாக சப்பாத்தி போல் தேய்த்துக் கொள்ளவும்.
மெலிதாக தேய்த்தால் நன்றாக மொறு மொறுப்பாக வரும். பிறகு டைமண்ட் ஷேப்பில் வெட்டிக் கொள்ளவும்.
வெட்டிய டைமண்ட் பிஸ்கட்களை எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சுவையான மசாலா பிஸ்கட்ஸ் ரெடி.