குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? - ESamayal

Ticker

10/recent/ticker-posts

Header Ads Widget

குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி?

என்ன தான் நாம் விதவிதமான உணவுகளை சாப்பிட்டாலும், பலருக்கு தோசை என்றாலே மிகவும் பிடித்த உணவாகும். குறிப்பாக குழந்தைகளுக்கும் பிடித்த உணவு தோசை தானே. 

குழந்தைகளுக்கு பிடித்த பன்னீர் மசாலா தோசை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிட கூடிய தோசையினை விதவிதமான சுவையில் செய்து கொடுத்தால் இன்னும் விரும்பி சாப்பிடுவார்கள். 

எனவே இன்று நாம் பன்னீர் மசாலா தோசை செய்வது எப்படி? என்பதை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:

தோசை மாவு - ஒரு கப்

கடலை மாவு - 2 ஸ்பூன்

சர்க்கரை - ஒரு ஸ்பூன்

துருவிய பன்னீர் - ஒரு கப்

மசாலா செய்ய :

நெய் - தேவையான அளவு

கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்

கிராம்பு - 4

ஏலக்காய் - 2

லவங்க பட்டை - 1

காய்ந்த மிளகாய் - 2

சீரகம் - ஒரு ஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

பெருங்காயம் தூள் - 1/4 ஸ்பூன்

மல்லி தூள் - 1/2 ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்

சீரகம் தூள் - 1/2 ஸ்பூன்

அரைத்த வெங்காயம் பேஸ்ட் - ஒரு கப்

இஞ்சி பூண்டு பேஸ்ட் - ஒரு ஸ்பூன்

மிளகாய்த்தூள் - ஒரு டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா தூள் - ஒரு ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2

சர்க்கரை - ஒரு ஸ்பூன்

ஒன்னிரண்டாக அரைத்த தக்காளி பேஸ்ட் - ஒரு கப்

கஸ்தூரி மேத்தி - சிறிதளவு

தயிர் - ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

வெங்காயம் பொடிதாக நறுக்கியது - சிறிதளவு

கொத்தமல்லி இலை - பொடிதாக நறுக்கியது சிறிதளவு

செய்முறை 1

பன்னீர் மசாலா தோசை

அடுப்பில் ஒரு கடாய் வைத்து, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி அது உருகியதும், இரண்டு டேபிள் ஸ்பூன் கடலை மாவை சேர்த்து வாசனை வரும் அளவிற்கு நன்றாக வதக்கி கொள்ளவும்.

இவ்வாறு வறுத்த மாவினை ஒரு பவுலில் எடுத்து கொள்ளுங்கள்.பின் மற்றொரு கடாயை அடுப்பில் வைத்து, அவற்றில் ஒரு ஸ்பூன் நெய், இரண்டு டேபிள் ஸ்பூன் ஆயில் சேர்த்து நன்றாக சூடேற்றவும்.

எண்ணெய் சூடேறியதும் சீரகம், கிராம்பு, ஏலக்காய் மற்றும் ஒரு லவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும். 

பின் அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் பெருங்காயம் தூளையும் சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

பிறகு அடுப்பை மிதமான தீயில் வைத்து அரைத்த வெங்காயம் பேஸ்ட் ஒரு கப் சேர்த்து பச்சை வாசனை நீங்கும் வரை நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

பின் அதனுடன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டினை சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.

இஞ்சி பூண்டு பேஸ்ட்டில் உள்ள பச்சை வாசனை நீங்கியதும் மிளகாய்த்தூள், மல்லி தூள், மஞ்சள் தூள், சீரகம் தூள், கரம் மசாலா தூள் ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளுங்கள்.

மசாலா பொருட்கள் நன்கு வதங்கியதும் அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்கு அடிபிடிக்காதவாறு கிளறி விட வேண்டும்.

இந்த சமயத்தில் வறுத்து வைத்துள்ள கடலை மாவையும் சேர்த்து கிளறி விட வேண்டும். பின் இதனுடன் கஸ்தூரி மேத்தி மற்றும் உப்பு சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும்

பிறகு தண்ணீர் ஊற்றி கிரேவியை நன்றாக கிளறி வேக வைக்க வேண்டும். 

இறுதியாக இந்த மசாலாவுடன் நீளவாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய் மற்றும் சர்க்கரை சேர்த்து கிளறினால் பன்னீர் மசாலா தோசை செய்வதற்கு மசாலா தயார்.

செய்முறை 2

பன்னீர் மசாலா தோசை

இப்பொழுது தோசை கல்லை அடுப்பில் வைத்து கடலைமாவு மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி.ஓரளவு வெந்ததும் மசாலாவை 3 டேபிள் ஸ்பூன் ஊற்றி 

அதன் மேல் நறுக்கி வைத்துள்ள வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலை சிறிதளவு வைத்து, மசாலாவை தோசை மீது நன்றாக பரப்பி விட வேண்டும்.

மசாலா, தோசை மீது நன்கு செட் ஆகியதும் துருவி வைத்துள்ள பன்னீரை தோசை மீது தூவி, தோசை கரண்டியை பயன்படுத்தி நன்கு தோசையை அழுத்தி விடுங்கள்.

நிமிடங்கள் கழித்து கல்லில் இருந்து தோசையை எடுத்து விடுங்கள். இப்பொழுது சுவையான பன்னீர் மசாலா தோசை தயாராகி விட்டது. அனைவருக்கும் அன்புடன் பரிமாறுங்கள். 

குறிப்பு :

இந்த பன்னீர் மசாலா தோசை தேங்காய் சட்னி மற்றும் சாம்பாருடன் தொட்டு சம்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும்.