குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி?





குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி?

0

நெல்லை ஊற வைத்து, இடித்து, அதிலிருந்து உமியை நீக்கி அவலாகப் பயன்படுத்துகிறோம். கைக்குத்தல் முறையில் தயாரிக்கப்படும் அவலில் ஊட்டச்சத்துகள் ஏராளம். 

குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ்
அரிசியின் நிறம், வகையைப் பொறுத்து அவலின் நிறத்திலும் ஊட்டச்சத்திலும் மாற்றங்கள் ஏற்படும். வெள்ளை மற்றும் சிவப்பு அவலைத் தான் நாம் பெரும்பாலும் பயன்படுத்துகிறோம். 

எளிதில் செரிமானமாகும். உடனடி எனர்ஜி தரும். சமைப்பதற்கு எளிதானது. உடல் சூட்டைத் தணிக்கும். செல்கள் புத்துணர்ச்சி பெற உதவும்.

தேவையான பொருட்கள்:

அவல் - ஒரு கப்

சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) - கால் கப்

நறுக்கிய கொத்த மல்லித்தழை - ஒரு டேபிள் ஸ்பூன்

பச்சை மிளகாய் - 2 (கீறவும்)

கறிவேப்பிலை - சிறிதளவு

கடுகு - அரை டீஸ்பூன்

உடைத்த உளுந்து - ஒரு டீஸ்பூன்

சீரகம் - அரை டீஸ்பூன்

கடலைப் பருப்பு - ஒரு டீஸ்பூன்

இஞ்சித் துருவல் - ஒரு டீஸ்பூன்

பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை

புளித்த தயிர் - ஒரு கப்

தேங்காய்த் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்

எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக் கொள்ளவும். தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்து கொள்ளவும்.

(மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்). வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப் பருப்பு, சின்ன வெங்காயம், 

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த் துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்த மல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)