புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை செய்வது எப்படி?





புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை செய்வது எப்படி?

0

ஜவ்வரிசி என்றதும் நம் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வருவது விஷேஷ தினங்களில் செய்யப்படும் ஜவ்வரிசி பாயசம் தான். 

புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை
ஜவ்வரிசி என்பது பதப்படுத்தப்பட்ட ஒரு சைவ வகை உணவாகும். இந்த ஜவ்வரிசி மரவள்ளிக் கிழங்கில் எடுக்கப்படும் ஸ்டார்ச்சிலிருந்து செய்யப் படுகிறது.

ஜவ்வரிசியில் புரதம் மற்றும் கார்போ ஹைட்ரேட் சத்துகள் அதிகமுள்ளது. அரிசி உணவை அடிக்கடி சாப்பிடுவதைத் தவிர்த்து, ஒரு வேளை ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் உடலுக்கு ஏராளமான சக்தி கிடைக்கிறது.

வயதாகும் காலத்தில் வலிமையாக இருக்கும் எலும்பு காரைக்கள் தேய்ந்து விடுகின்றன. ஜவ்வரிசியில் கால்சியம் சத்து அதிகமிருக்கிறது. 

இந்த ஜவ்வரிசி கொண்டு செய்யப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு அதிலிருக்கும் கால்சியம் சத்து எலும்பு களுக்குள்ளாக இருக்கும் காரைகளை

வலுப்படுத்தி ஆஸ்டியோ போரோசிஸ் எனப்படும் எலும்பு தேய்மானம் நோய் ஏற்படாமல் தடுக்கிறது. இந்த ஜவ்வரிசியில் புரதம் நிறைந்த ஜவ்வரிசி அடை செய்வது எப்படி? என்று பார்ப்போம்..

தேவையான பொருட்கள் :

ஜவ்வரிசி - ஒரு கப்,

பொட்டுக்கடலை - அரை கப் (மாவாக அரைக்கவும்),

அரிசி மாவு, கேரட் துருவல் - தலா அரை கப்,

வெங்காயம் - 4,

இஞ்சி, பச்சை மிளகாய் - தேவையான அளவு,

தேங்காய் துருவல் - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவையான அளவு.

செய்முறை :

இஞ்சி, ப.மிளகாய், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். ஜவ்வரிசியை முதல் நாள் ஊற வைத்து, மறுநாள் பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் ஜவ்வரிசியுடன், பொட்டுக்கடலை, அரிசி மாவு, கேரட் துருவல், வெங்காயம், இஞ்சி, ப.மிளகாய், தேங்காய் துருவல், உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் கொட்டிய பிசைந்து வைக்கவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை அடை போல மெல்லியதாக தட்டி, சுற்றிலும் எண்ணெய் விட்டு பொன்னிறமாக எடுக்கவும். 

இதை வெல்லம் அல்லது ஏதாவது ஒரு சட்னியுடன் சாப்பிடலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)