சத்து மிக்க பாதாம் பால் செய்வது எப்படி?





சத்து மிக்க பாதாம் பால் செய்வது எப்படி?

0

பாதாம் பால் எடை குறைக்கும் முயற்சியில் இருப்பவர்களுக்கு வரப்பிரசாதம். நம்ம ஊரு பல்வேறு ருசியான பால்கள் வரிசையில் இது ஒரு வெளிநாட்டு இறக்குமதி பானம்.

சத்து மிக்க பாதாம் பால்

பால் புரதம், சோயா புரதம் செரிமானத்தில் கோளாறு உள்ளவர்களுக்கு பாதாம் பால் குடிப்பதால் பாலின் மூலம் கிடைக்கும் தேவையான சத்துக்கள் கிடைத்து விடுகிறது. 

வேகன் டயட்டில் இருப்பவர்களுக்கு நல்லதொரு தாவரத்தில் அதாவது பாதாம் பருப்பில் இருந்து கிடைக்கும் பால். பசும்பாலை விட ஐம்பது சதவீதம் கலோரி அளவு குறைவு.

இதில் கொழுப்பு, புரதம், கார்போ ஹைட்ரேட் குறைவாக உள்ளது. அதே சமயம் பாதாம் பாலில் 49% விட்டமின் டி உள்ளது. கால்சியம், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியது.

தேவையானவை 

பாதாம் பருப்பு - 15

தண்ணீர்

செய்முறை 

8 விருந்து 12 மணி நேரம் வரை பாதாம் விதைகளை ஊற வைக்கவும். றிய பாதாமில் தோலை உரித்து எடுப்பது எளிதாக இருக்கும் என்பதால் தோலை நீக்கவும்.

ஒரு தம்ளர் தண்ணீருக்கு பதினைந்து பாதாம் பருப்புகள் கொண்டு மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

நுரை ததும்பும் பாதாம் பால் தயார். அப்படியே குடிக்கலாம் அல்லது பாலினை பயன்படுத்தும் இடங்களில் எல்லாம் பாதாம் பாலை பயன்படுத்தலாம்.

பாதாம் பாலை எப்படி பயன்படுத்துவது?

ஓட்ஸ் கஞ்சி, செரியல்களில் மாட்டு பாலுக்கு பதிலாக பாதாம் பாலை பயன்படுத்தலாம். காபி, டீ யில் பாதாம் பாலை சேர்த்து பருகலாம்.

ஐஸ்கிரீம், புட்டிங்களில் பாதாம் பால் சேர்த்து செய்யலாம். பால் சேர்த்து செய்யும் பேக்கிங் உணவுகள் அனைத்திற்கும் பாதாம் பாலை பயன்படுத்தலாம். 

ஸ்மூத்தி, சாலட், சாலட்டிற்க்கு டிரெஸ்ஸிங் ஆகப்பயன்படுத்தலாம்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)