சூப்பர் மார்க்கெட்டுகளில் மஞ்சள் நிறத்தில் உருண்டையாக வெள்ளரிப் பழம் போன்றே தக்காளியைக் காட்டிலும் சற்றே பெரிய சைஸில் ஒரு காய்கறி கிடைக்கும். அதன் பெயர் தோசைக்காய்.
நம்மூரில் பெரிதாக இதைப் பயன்படுத்தி கிரேவி, சாம்பார் என பலரும் வைப்பதில்லை. ஆனால், ஆந்திராவில் இது வெகு பிரசித்தி. இதில் மணக்க மணக்க சாம்பார் வைத்துக் காரசாரமாகச் சாப்பிடுகிறார்கள் அவர்கள்.
அதையே கொஞ்சம் கெட்டியாக பருப்பு சேர்க்காமல் சமைத்தால் சப்பாத்தி, பூரிக்கும் தொட்டுக் கொண்டு சாப்பிடலாம். அருமையான சுவை என்பதோடு உடலுக்கு நல்ல குளிர்ச்சியும் தருகிறது . மிகச்சிறந்த மலமிழக்கியும் கூட.
தேவையான பொருட்கள்.:
மிகவும் பொடியாக நறுக்கிய தோசைக்காய் (சிறிய முலாம்பழம் போல் மஞ்சள் நிறத்தில் விதையுடன் இருக்கும்) – ஒரு கப்,
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !
கொத்தமல்லி – அரை கட்டு (நறுக்கவும்),
மஞ்சள்தூள், உப்பு, – தேவையான அளவு.
வறுத்து அரைக்க.:
கடுகு, பெருங்காயம், வெந்தயம் – சிறிதளவு,
காய்ந்த மிளகாய் – 10 (அல்லது காரத்துக்கேற்ப),
பூண்டு – 2 பல்,
புளி – நெல்லிக்காய் அளவு,
கறுப்பு உளுந்து – 2 டீஸ்பூன்,
எண்ணெய் – ஒரு டீஸ்பூன்.
செய்முறை.:
நறுக்கிய தோசைக்காயில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துப் பிசிறி வைக்கவும். வறுத்து அரைக்க கொடுத்துள்ள வற்றை எண்ணெயில் வறுத்து நறுக்கிய கொத்தமல்லி,
சில்லி சீஸ் பரோட்டா தயாரிப்பது எப்படி?
சிறிதளவு நீர் சேர்த்து மிக்ஸியில் அரைத்து, தோசைக்காய் துண்டுகளை சேர்த்து மீண்டும் ஒரு சுற்று சுற்றி எடுக்கவும். சாதம், இட்லி, தோசைக்கு இது சூப்பர் காம்பினேஷன்.
குறிப்பு :
கொத்தமல்லி சமையலறையில் காணப்படும் முக்கியமான பொருட்களில் ஒன்றாகும். கொத்தமல்லி தூள் அல்லது உலர்ந்த கொத்தமல்லி விதைகள் (coriander seeds) கிட்டத்தட்ட அனைவரின் சமையலறையிலும் இருக்கும்.
கொத்தமல்லி கிட்டத்தட்ட எல்லா காய்கறிகளிலும் பயன்படுத்தப் படுகிறது. கொத்தமல்லி இல்லாமல் எந்த குழம்பும் முழுமையடையாது. கிரேவிக்களை தவிர, இது பல உணவுகளிலும் பயன்படுத்தப் படுகிறது.
ஆனால் கொத்தமல்லி சுவையை சுவையாக மாற்றும் அதே வேளையில், அது ஆரோக்கியத்திற்கும் மிகவும் நன்மை பயக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?..
செரிமானம் தொடர்பான பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு கொத்தமல்லி தண்ணீர் ஒரு வரப்பிரசாதம் என கூறப்படுகிறது. ஒரு பாத்திரத்தில் 4 ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை போடவும்.
இதையடுத்து, அந்த பாத்திரத்தில் 2 டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
தண்ணீர் நன்றக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை ஆரவடித்து வடிகட்டினால் மல்லி தண்ணீர் தயார். இதை முதல் நாள் இரவே ஊறவைத்தும் உபயோகிக்கலாம்.