முட்டை மற்றும் தயிர் ஹேர் பேக் செய்வது எப்படி?





முட்டை மற்றும் தயிர் ஹேர் பேக் செய்வது எப்படி?

0

எவ்வளவு தான் கூந்தல் பராமரிப்பிற்காக ஆரோக்கியமான உணவுகளை உண்டாலும், நிறைய நீர் குடித்தாலும் மட்டும் போதாது.

முட்டை மற்றும் தயிர் ஹேர் பேக்

போதுமான அளவு எண்ணெய் தேய்ப்பது, ஹேர் பேக் போடுவது போன்றவற்றை முறையாக பின்பற்றினால் தான் கூந்தல் ஆரோக்கியமாக இருக்கும். 

இவற்றை முறையாக செய்து வந்தாலே போதும் அனைத்து வகையான கூந்தல் பிரச்சனைகளுக்கு குட்-பை சொல்லி விடலாம். வாருங்கள் அவற்றைப் பற்றி தற்போது தெரிந்து கொள்வோம்.

தேவையான பொருட்கள்:

முட்டை

தயிர்

செய்வது எப்படி?

இந்த இரண்டு பொருட்களை வைத்தே கூந்தலின் பொலிவை அதிகரித்து விடலாம். கூந்தல் நீளத்திற்கு தகுந்தாற்போல் முட்டையும், தயிரும் எடுத்துக் கொள்ளவும். 

வளரும் குழந்தைகளுக்கு முட்டை சென்னா செய்வது எப்படி?

அதாவது, தோள்பட்டை வரை முடி இருந்தால் ஒரு முட்டையும், இடுப்பு வரை இருந்தால் 2 முட்டையும், இடுப்பிற்கும் கீழே இருந்தால் 3 முட்டையும் எடுத்துக் கொள்ளவும்.

பயன்படுத்தும் முறை:

ஒன்று அல்லது இரண்டு முட்டைக்கு 2 டேபிள் ஸ்பூன் தயிர் சரியாக இருக்கும். 2 முட்டைக்கு மேல் தேவைப்பட்டால் 3 டேபிள் ஸ்பூன் தயிர் எடுத்துக் கொள்ளவும். 

முட்டைக்கு ஏற்ற அளவு தயிர் எடுத்துக் கொள்ளவும். இந்த ஹேர் பேக் செய்வதற்கு முட்டையின் வெள்ளைக்கரு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் தயிர் இரண்டையும் ஒன்றாக சேர்த்து 2 நிமிடத்திற்கு நன்கு கலந்துக் கொள்ளவும்.

இந்த கலவையை முடியின் மீது மட்டும் தடவவும். (ஸ்கால்ப்பில் தடவ வேண்டாம்) 1 மணி நேரம் கழித்து சாதாரண நீரினால் தலையை அலசிடவும்.

மறுநாள் ஷாம்பூ போட்டு குளித்துக் கொள்ளவும். நல்ல பலன் கிடைக்க, இந்த ஹேர் பேக்கை மாதத்திற்கு 2 முறை பயன்படுத்த வேண்டும்.

Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)