மட்டன் கோலா உருண்டைக் குழம்பு செய்வது !





மட்டன் கோலா உருண்டைக் குழம்பு செய்வது !

கோலா உருண்டைகள் இந்திய துணை கண்டம் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மிகவும் பிரபலமான ஒரு உணவு வகை. இவை மாமிசம் சேர்க்காமலும் செய்யப்படுகிறது. 
மட்டன் கோலா உருண்டைக் குழம்பு
மாமிசம் சேர்க்காமல் செய்யப்படும் கோலா உருண்டைகளை கிரீஸ் நாட்டில் hortokeftedes என்றும், துருக்கியில் Çiğ köfte என்றும் அழைக்கிறார்கள். 

மாமிசம் இல்லாமல் செய்யப்படும் கோலா உருண்டைகளில் மாமிசத்துக்கு பதிலாக உருளைக்கிழங்கோ அல்லது பன்னிர்ரோ சேர்க்கப்படுகிறது. சில பகுதிகளில் இவை கிரேவி ஆகவும் செய்யப்படுகிறது. இவை Meatballs என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும். 
மட்டன் கோலா உருண்டைகளின் ஸ்பெஷல் என்னவென்றால் இவை நன்கு மொறு மொறுப்பாக சுவையாக இருப்பது மட்டும் இன்றி இவை ஒரு சத்தான மாலை நேர சிற்றுண்டியும் கூட. 

குழந்தைகளுக்கு தினசரி மாலை நேரங்களில் பிஸ்கெட் மற்றும் சிப்ஸ்களை கொடுப்பதை விட இந்த சத்தான மட்டன் கோலா உருண்டைகளை செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். இப்போது கோலா உருண்டைக் குழம்பு எப்படி செய்வது என்று பார்ப்போம்.

தேவையானவை :

மட்டன் கைமா - 1/2 கிலோ,

கசகசா - 1 தேக்கரண்டி,

மிளகாய்தூள் - 1/2 தேக்கரண்டி,

பட்டை - சிறுதுண்டு சோம்பு,

உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

அரைக்கத் தேவையானவை :

தேங்காய் துருவல் - 1/2 மூடி,

வெங்காயம் - 1 நறுக்கியது.

மிளகாய் வற்றல் - 4,

தனியா தூள் - 1 மேசைக்கரண்டி,

சீரகம்-& 1 தேக்கரண்டி,

மேற்கூறிய பொருட்களை வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கி அரைத்துக் கொள்ளவும்.
செய்முறை :
கோலா உருண்டைக் குழம்பு
1.கொத்திய கறியை நன்றாக சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். வெந்த கறியுடன் லேசாக உப்பு சேர்த்து பட்டை, சோம்பு, கசகசா, மிளகாய்தூள் சேர்த்து மிக்ஸியில் ஒரு சுற்று விடவும்.

2.கறியுடன் மசால் கலவை சேர்ந்தவுடன் சிறிய எலுமிச்சம்பழ அளவில் அந்த கலவையை ஒவ்வொன்றாக உருட்டி தனியே வைக்க வேண்டும்.
3.குழம்பிற்கு அரைத்த மசாலாவுடன் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து கூட்டி வைக்கவும். குழம்பு கொதித்து வரும் போது செய்து வைத்த உருண்டைகளை ஒவ்வொன்றாகப் போடவும். 

தேவைக்கேற்ப கெட்டியான பதத்தில் குழம்பு வரும் போது இறக்கி விடவும். கோலா உருண்டை குழம்பு ரெடி.
Tags: