சிறுநீரக நோய்க்கு மூக்கிரட்டை கீரை சூப் செய்முறை?





சிறுநீரக நோய்க்கு மூக்கிரட்டை கீரை சூப் செய்முறை?

0
மூக்கிரட்டை. அடர் நீல வண்ணத்திலும், வெண்மை வண்ணத்திலும் பூக்கும் மலர்களைக் கொண்ட இருவேறு விதமான மூக்கிரட்டை செடிகளின் இலைகள் பசுமை வண்ணத்தில், தண்டுகளில் தனித்தனியே காணப்படும். 
சிறுநீரக நோய்க்கு மூக்கிரட்டை கீரை சூப்
சாரணைக் கொடி, சாரணத்தி என்றும் அழைக்கப்படும் மூக்கிரட்டை, அரிய தன்மைகள் உடைய ஒரு நற்செடியாகும். 

உடலுக்கு வியாதி எதிர்ப்பு சக்தி அளித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றும் ஆற்றல் மிக்க இதன் இலைகளில், பத்துக்கும் மேற்பட்ட அமினோ அமிலங்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை மிகுந்துள்ளன. 

மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.

மூக்கிரட்டை உடலில் இறங்கும் போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். 

இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.

புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.

சூப் உடலுக்கு மிகவும் நல்லது. இதுவரை எத்தனையோ சூப் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் மூக்கிரட்டை கீரை கொண்டு செய்யப்படும் சூப்பில் எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன.

குறிப்பாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை குடிப்பது மிகவும் நல்லது. அது மட்டுமின்றி, இந்த கீரையைக் கொண்டு சூப் செய்து குடித்தால், உடலினுள் நீரினால் ஏற்பட்ட வீக்கமானது குறையும். 

தேவையான பொருட்கள்:

மூக்கிரட்டை கீரை - 2 கையளவு

பூண்டு - 2 பல்

மஞ்சள் தூள் - சிறிதளவு

மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

செய்முறை:
பூண்டை தட்டிக் கொள்ளவும். மூக்கிரட்டை கீரையை நன்கு சுத்தமாக நீரில் கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் 2 டம்ளர் நீரை அடுப்பில் வைத்து கொதிக்க ஆரம்பிக்கும் போது, கீரையை சேர்த்து கொதிக்க விட வேண்டும்.

கீரையானது நன்கு வெந்ததும், அதில் சீரகப் பொடி, தட்டிய பூண்டு, மஞ்சள் தூள், மிளகுத் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

கடைசியில் அதனை இறக்கி வடிகட்டி பருக வேண்டும். மூக்கிரட்டை கீரை சூப் ரெடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)