கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி?





கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி?

கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது. 
கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது எப்படி?
கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. கேரட்டில் பீட்டா கரோட்டின் இருக்கிறது. பீட்டா கரோட்டினில் உள்ள வைட்டமின் ஏ சத்து மாலை மற்றும் இரவு நேரங்களிலும் கண் பார்வை மங்கலாகாமல் பார்த்து கொள்கிறது. 

இதனால் இரவு நேரத்திலும் கண்களில் பார்வை கூர்மையாக இருக்கும். கண் சம்பத்தப்பட்ட நோய்கள் உங்களை அண்டாது. முட்டையில் அளவற்ற புரதச்சத்து நமக்கு கிடைக்கும். 

அது நாள் முழுவதும் நமக்குத் தேவையான ஆற்றலை வழங்கும். முட்டை சாப்பிட்டால் நாள் முழுவதும் பசி கட்டுக்குள் இருக்கும். 

உடல் எடையை குறைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் காலை உணவாக முட்டை எடுத்துக் கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்.:
கேரட் - 2

ஸ்வீட் கார்ன் - 1/2 கப்

வெங்காயம் - 1

சோள மாவு - 2 ஸ்பூன்

வெங்காயத்தாள் - சிறிதளவு

முட்டை - 3

மிளகுத்தூள் - தேவையான அளவு

உப்பு - தேவையான அளவு

தண்ணீர் - 4 கப்

செய்முறை
கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் செய்வது
முதலில் சோள மாவை சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கேரட், வெங்காயத்தாள், வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அடுப்பில் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நன்கு கொதிக்க விடவும். தண்ணீர் நன்கு கொதித்ததும் அதில் கேரட், வெங்காயம், ஸ்வீட் கார்ன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு கொதிக்க விடவும்.

அனைத்தும் முக்கால் பாகம் வெந்தவுடன் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவை சேர்த்து நன்கு கிளறவும். பின்பு உப்பு, மிளகுத்தூள், வெங்காயத்தாள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
இப்போது அதில் முட்டைகள் உடைத்து ஊற்றி நன்கு கிளறி விட்டு 2 நிமிடங்கள் கழித்து இறக்கி சூடாக பரிமாறவும் கேரட் கார்ன் சேர்த்த முட்டை சூப் ரெடி.
Tags: