என்னென்ன தேவை?

வெங்காயம் – 1

தக்காளி – 3

பன்னீர் – 1 கப்

புதிய பட்டாணி – 1 கப்

இஞ்சி – 1 அங்குல துண்டு

பூண்டு – 6 பல்

மல்லி தூள் – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா தூள் – 1 தேக்கரண்டி

சீரகம் – 1 தேக்கரண்டி

உப்பு – சிறிது

கொத்தமல்லி இலை – சிறிது

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்

எப்படிச் செய்வது?
மட்டர் பன்னீர் தயாரிப்பது
கடாயில் எண்ணெய் விட்டு இஞ்சி, பூண்டு, வெங்காயம், சேர்த்து பொன்னிறமாக வதக்கி தக்காளி சேர்த்து கிளறி மிக்சி ஜாரில் போட்டு நன்கு மசித்து வைக்கவும். 
வாணலியில் எண்ணெய் விட்டு சீரகம், அரைத்து வைத்த மசாலா சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும். 

இப்போது கொத்தமல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், பட்டாணி, பன்னீர் சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி, 
ஒரு பிரஷர் குக்கரில் இவற்றை மாற்றி நன்கு வேகும் வரை சமைக்கவும். பின் கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.