இனிப்பு சீடை செய்யும் முறை !





இனிப்பு சீடை செய்யும் முறை !

தேவையான பொருட்கள்.:
பச்சரிசி – 250 கிராம்,


வெல்லம் (பொடித் தது) – 200 கிராம், 

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு, 


எள் – ஒரு டீஸ்பூன், 

தேங்காய்த் துருவல் – 2 டேபிள் ஸ்பூன், 

வறுத்து அரைத்த உளுத்தம் மாவு – ஒரு டேபிள் ஸ்பூன், 

எண்ணெய் – 500 மில்லி.


செய்முறை.: 
பச்சரிசியை 2 மணி நேரம் ஊற வைத்துக் களைந்து, வடிக்கட்டவும்.

இனிப்பு சீடை
இதைச் சுத்தமான துணியில் போட்டு நிழலில் சிறிது நேரம் உலர்த்தவும். பிறகு மிக்ஸியில் அரைத்து, மாவு சல்லடையில் சலிக்கவும்.

சலித்த மாவை வெறும் வாணலியில் லேசாக சூடுவரும் வரை வறுத்துக் கொள்ளவும்.
வெல்லத்தைச் சிறிது தண்ணீர் விட்டு காய்ச்சி வடிக்கட்டி உருட்டு பதத்தில் பாகு காய்ச்சவும் (வெல்லப்பாகை சிறிதளவு எடுத்து தண்ணீரில் விட்டால் லேசாக உருட்ட வரும்.

அது தான் சரியான பதம்). பாகுடன் வறுத்து வைத்த மாவு, ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும். எள்ளை வெறும் வாணலியில் வறுத்து மாவுடன் சேர்க்கவும்.

இதனுடன் வறுத்து அரைத்த உளுத்தம் மாவு, தேங்காய்த் துருவல் சேர்த்துக் கலந்து ஒரு மணி நேரம் அப்படியே வைக்கவும். பிறகு நன்கு பிசைந்து நெல்லிக்காய் அளவு சீடைகளாக உருட்டவும். 
வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து நான்கு ஐந்து சீடைகளாகப் போட்டு மெதுவாகத் திருப்பிப் போட்டு வேகவிட்டு எடுக்கவும்.

குறிப்பு.:
மாவை வெல்லப்பாகில் போட்டு மறுநாள்கூட எண்ணெயில் சீடைகளை உருட்டிப் போடலாம்.
Tags: