காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை செய்வது எப்படி?





காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை செய்வது எப்படி?

நம்மில் பலருக்கு தோன்றும், தினமும் சிக்கன் சாப்பிடுவது பாதுகாப்பானதா என்று?… நம்மில் பலர் தினமும் அசைவ உணவு சாப்பிட்டால் அது உடலுக்கு கேடு என நினைப்போம். 
காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை
ஆனால், அந்த நம்பிக்கை 50% தவறானது. அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்ற பழமொழி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று. அந்த வகையில், சிக்கனை அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது ஆபத்தானது தான். 

ஆனால், தினமும் சரியான அளவு சிக்கன் சாப்பிட்டால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோழிக்கறியில் நிறைந்துள்ள புரதம் ஆஸ்டியோ போரோசிஸ் (osteoporosis) எனப்படும் எலும்பு தொடர்பான பிரச்சனையை தடுக்கிறது. 

அதுமட்டும் அல்ல, சிக்கன் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றது. சிக்கனில் உள்ள கோலின் மற்றும் வைட்டமின் B12 நினைவாற்றல் மேம்பாட்டிற்கு உதவுகிறது. 

அதிகளவு கோலின் உட்கொள்வபர்களின் நினைவாற்றல் சிறப்பாக இருப்பதாக பல ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. சிக்கனில் எத்தனையோ வெரைட்டிகள் உள்ளன. 

அதில் ஒன்று தான் காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை. இந்த ரெசிபியானது ஆந்திராவில் மிகவும் பிரபலமானது. இதனை வீட்டில் கூட செய்து முயற்சிக்கலாம்.

இங்கு அந்த ஆந்திரா ஸ்பெஷல் ரெசிபியான காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெசிபியின் செய்முறை கொடுக்கப் பட்டுள்ளது.
தேவையான பொருட்கள்:

சிக்கன் - 1/2 கிலோ

பெரிய வெங்காயம் - 1

பூண்டு - 10 பற்கள் (பொடியாக நறுக்கியது) 

இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது) 

பச்சை மிளகாய் - 8 (அரைத்தது)

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - தேவையான அளவு

அரைப்பதற்கு...

பட்டை - 2

கிராம்பு - 4

மல்லி - 1 டேபிள் ஸ்பூன்

வெந்தயம் - 1/4 டீஸ்பூன்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/2 டீஸ்பூன்

செய்முறை:
முதலில் சிக்கனை நன்கு சுத்தமாக கழுவி, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் மிக்ஸியில் அரைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை போட்டு அரைத்து பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும். 

பிறகு அதில் சிக்கனை போட்டு சிறிது நேரம் வதக்கி, பின் பச்சை மிளகாய் பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

பின் அதில் பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி, உப்பு தூவி, அரைத்து வைத்துள்ள பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். 
சிக்கன் நன்கு வெந்து, தண்ணீர் வற்றியதும், அதனை இறக்கி பரிமாறினால், காக்கிநாடா சிக்கன் ட்ரை ப்ரை ரெடி !
Tags: