சூப்பரான வாழைப்பூ பணியாரம் செய்வது எப்படி?

சூப்பரான வாழைப்பூ பணியாரம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள்

புழுங்கல் அரிசி - கால் கிலோ

வாழைப்பூ - 1

கடலை பருப்பு, துவரம் பருப்பு - தலா ஒரு கப்

இஞ்சி - ஒரு துண்டு, 

மிளகு - ஒரு டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

காய்ந்த மிளகாய் - 2

தக்காளி - 1

நெய் - ஒரு கப் (சிறியது)
செய்முறை
சூப்பரான வாழைப்பூ பணியாரம்

வாழைப்பூவை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும். புழுங்கல் அரிசி, கடலை பருப்பு, துவரம் பருப்பு ஆகிய வற்றை ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

இவற்றுடன் இஞ்சி, மிளகு, காய்ந்த மிளகாய், தக்காளி சேர்த்து அரைக்கவும். நெய்யில் வாழைப்பூவை வதக்கி மாவுடன் கலந்து தேவையான உப்பு சேர்த்து கரைத்துக் கொள்ளவும்.
பணியாரக் குழியில் நெய் விட்டு, மாவை ஊற்றி பொன்னிறமாக வேக விட்டு எடுக்கவும். சூப்பரான வாழைப்பூ பணியாரம் ரெடி.
Tags: