கத்திரிக்காய் சாத பொடி செய்வது !

கத்திரிக்காய் சாத பொடி செய்வது !

இந்த பொடியை நாம் வாங்கி பாத், பட்டாணி பாத், ரவா கிச்சடி, கொத்தவரங்காய் பாத், குடமிளகாய் பாத், மிக்சட் வெஜிடபிள் பாத், மேத்தி ( வெந்தய கீரை ) பாத் நாம் தாரளமாக பயன்படுத்தலாம்.
கத்திரிக்காய் சாத பொடி
உணவகங்களில் கிடைக்கும் பல சுவையான உணவு வகைகளை உங்கள் வீட்டு சமையலறையில் செய்து நீங்கள் உங்கள் குடும்ப நபர்களை செய்து அசத்தலாம்.
தேவையான பொருட்கள்

உளுத்தம்பருப்பு 1/2 கப்

கடலைபருப்பு 1/2 கப்

கொத்தமல்லி விதை 1/4 கப்

பட்டை 8 இன்ச்

கிராம்பு 12

ஏலக்காய் 2

கொப்பரை தேங்காய் துருவல் 2 மேஜைக்கரண்டி

கசாகசா 2 மேஜைக்கரண்டி

வரமிளகாய் நீளமானது 25

கறிவேப்பிலை கொஞ்சம்

செய்முறை

1. இப்பொழுது வடச்சட்டியில் கொப்பரை தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வறுத்து மொறுவென்று ஆனதும் எடுத்து வைக்கவும்.
2. இப்பொழுது வடச்சட்டியில் சிறிது கடலெண்ணய் ஊற்றி காய்ந்ததும் அதில் வரமிளகாயை சேர்த்து நன்கு முறுகலாக ஆனதும் எடுத்து வைக்கவும்.

அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வறுத்து எடுத்து ஆறவைத்து கொள்ளவும்.
3. பிறகு அதே வடசட்டியில் எண்ணெய் விடாமல் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கொத்தமல்லி விதை, பட்டை, கிராம்பு,ஏலக்காய் சேர்த்து நன்றாக மணம் வீசும் வரை வறுத்து எடுத்து ஆற வைத்து கொள்ளவும்.

4. பிறகு அதில் கசகசாவை சேர்த்து நன்றாக சில நொடிகள் சிறுதீயில் வறுத்து எடுத்து வைக்கவும்.

5. அனைத்து பொருட்களையும் ஒன்றாக சேர்த்து நன்றாக ஆறியவுடன் மிக்ஸியில் நன்றாக நைசாக பொடியாக அரைத்து கொள்ளவும்.

6. இதை எவர்சில்வர் டப்பாவில் அடைத்து விட்டு பிரிஜ்ல எடுத்து வைத்து கொள்ளவும்.
Tags: