ஆரோக்கியமான தினை கம்பு அடை செய்வது எப்படி?





ஆரோக்கியமான தினை கம்பு அடை செய்வது எப்படி?

முழு தானியமான கம்பில் உடலுக்கு நன்மை பயக்கக் கூடிய பல நன்மைகள் நிறைந்துள்ளன. ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைபிடிக்க விரும்பும் பலரும் சிறுதானியங்களை தங்கள் உணவில் சேர்த்து வருகின்றனர். 
ஆரோக்கியமான தினை கம்பு அடை செய்வது எப்படி?
கம்பு, சோளம், வரகு, திணை போன்ற சிறு தானியங்களை சாப்பிட்டால் குச்சி ஊன்றும் வயதிலும் யாருடைய உதவியும் இன்றி சுயமாகவும், திடமாகவும் வாழலாம். கம்பு தானியத்தில் குறைந்த அளவு கலோரி மட்டுமே உள்ளது. 

உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க விரும்புபவர்கள் கம்பை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கத்தை எளிதாக்கவும், உடல் எடையை குறைக்கவும் உதவும். 

கம்பு தானியத்தை கொண்டு செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடும் பொழுது உங்களுக்கு நீண்ட நேரத்திற்கு பசி எடுக்காது. இதன் மூலம் தேவையற்ற உணவு உட்கொள்ளலை தடுக்கலாம். 

கம்பில் புரதம், வைட்டமின் B6, துத்தநாகம், இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் போன்ற பல ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. 

இந்த ஊட்டச் சத்துக்கள் யாவும் ஆரோக்கியமான முடி மற்றும் சருமத்திற்கு அத்தியாவசிய மானவை. கம்பை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த ஊட்டச்சத்து குறைபாடுகளையும் தடுக்கலாம்.

தேவையானவை : .

தினை, கம்பு, பச்சரிசி  - தலா அரை கப்,

கடலை பருப்பு, துவரம் பருப்பு - தலா கால் கப்,

காய்ந்த மிளகாய் 10,

பல்லு பல்லாக நறுக்கிய தேங்காய் - கால் கப்,

உப்பு, பெருங்காயம் - தேவையான அளவு,

எண்ணெய் - 100 மில்லி.
செய்முறை : .

தினை கம்பு, அரிசி ஆகிய வற்றை மெஷினில் கொடுத்து ரவையாக பொடிக்கவும். இதை உப்பு கலந்த நீரில் 2 மணி நேரம் ஊற விடவும். 

பருப்பு வகைகளை ஒரு மணி நேரம் ஊறவிட்டு மிளகாய், பெருங்காயம் சேர்த்து அரைக்கவும்.
இத்துடன் ஊறிய தினை கம்பு அரிசி கலவை, நறுக்கிய தேங்காய் சேர்த்து நன்கு கலக்கவும். தோசை கல்லை சூடாக்கி, மாவை அடைகளாக ஊற்றி, எண்ணெய் விட்டு சுட்டு எடுக்வும்.

இதை சூடாகத்தான் சாப்பிட வேண்டும். ஆறிவிட்டால் ருசி குறையும்.
Tags: