அல்வா ன்றாலே அனைவருக்கும் நாவுறும். அதுவும் முந்திரி அல்வா, அதுவும் க்ளுடன் அல்லாத சோயா அல்லாத ஒரு அல்வா தயாரிப்பது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்
காஜர் அல்வா செய்வது
தேவையான பொருட்கள்
2 ஸ்பூன் பாதாம் வெண்ணெய்

3 ஸ்பூன் நறுக்கிய முந்திரி

2 ஸ்பூன் உலர் திராட்சை

2 ஸ்பூன் பிஸ்தா

2 1/2 கப் துருவிய கேரட்

அரை கப் பாதாம் மீல்

11/4 கப் பாதாம் பால்

சீனித்துளசி சுவைக்கேற்ப

குங்குமப்பூ சிறிதளவு

அரை ஸ்பூன் ஏலக்காய் தூள்

2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் 
செய்முறை
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, முந்திரி, பிஸ்தா, உலர் திராட்சை ஆகியவற்றை லேசாக பொரித்து எடுத்துக் கொள்ளவும். 

இந்தக் கலவையில் துருவிய கேரட் போட்டு, ஐந்து நிமிடம் வேக விடவும். அடுத்தது, இந்தக் கலவையில் பாதாம் மீல் மற்றும் பாதாம் பால் சேர்க்கவும். 
நன்றாகக் கலந்து, மிதமான தீயில் வைத்து 15 நிமிடங்கள் வேக விடவும். பாதாம் வெண்ணெய், குங்குமப்பூ, ஏலக்காய், போன்ற வற்றை சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.

நீர் உறிஞ்சப்படும் வரை கிளறிக் கொண்டே இருக்கவும். சீனித்துளசி சேர்த்து சுவையைச் சரி பார்க்கவும். முழுவதும் வெந்தவுடன், சூடாக அல்வாவைப் பரிமாறவும்.