வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்ப இத படிங்க !





வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா நீங்கள்? அப்ப இத படிங்க !

லில்லி தாவர குடும்பத்தை சேர்ந்தும், வலுவான சுவையுடன் அதிக நறுமணத்துடன் பச்சையம் இல்லாத காய்கறியுமான வெங்காயம், 
வெங்காயம் அதிகம் சாப்பிடுபவரா
பொதுவாக பொரும்பாலான சமையலில் காய்கறியாகவோ அல்லது சுவைக்காகவோ சேர்க்கப் படுகிறது.
தேசிய வெங்காய கூட்டமைப்பின் தகவலின் படி, அமெரிக்காவில் மூன்றாவது அதிகம் நுகரும் காய்கறியா கவும், நீண்ட நெடுங்காலமாக பயன்படுத்து வதாகவும் இருக்கிறது வெங்காயம்.

வகைகள்
வெங்காய வகைகள்
1 இன்ச் முதல் 4.5 இன்ச் வரை சுற்றளவு கொண்டு பல்வேறு அளவுகளில் கிடைக்கும் வெங்காயத்தின் உட்பகுதி மஞ்சள், சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் உள்ளது.

சமையலுக்கு பல்வேறு வகையான வெங்காயங்கள் பயன்படுத்தப் படுகின்றன. என்ன தான் அது உங்களுக்கு முதல் விருப்பமாக இல்லாமல் இருந்தாலும், சிலர் வெங்காயத்தை அப்படியே சாப்பிடுவர். 

பிரபலமான ஸ்பேனிஸ், விடலியா, மஞ்சள், வெள்ளை, சிவப்பு வெங்காயம், சிப்போலினி, முத்து, ஸ்கேலியன், சலோட், லீக்ஸ் போன்ற பலவகை வெங்காயங்கள் உள்ளன. 

அவற்றின் சுவை கூட ஒன்றுக் கொன்று மாறுபடும். இனிப்பாகவும், நடுநிலை யாகவும், காரமாகவும் என பல சுவைகளில் இருக்கும்.

கலோரிகள்
கலோரிகள்
வெங்காயத்தில் மிகக்குறைந்த கலோரியும் கார்போ ஹைட்ரேட்டும் இருப்பதால் அது நிச்சயம் ஒரு வரம் தான். ஏனெனில் சிறிதளவு வெங்காயம் அதிக பலன்களை தரவல்லது.

நடுத்தரமான அளவுள்ள வெங்காயத் துண்டு ஒன்றில் வெறும் 6 கலோரிகளும், 1.3 கிராம் கார்போ ஹைட்ரேட்டும் மட்டுமே இருப்பதால், 
குறைந்த கலோரி மற்றும் கார்போ ஹைட்ரேட் இல்லாத உணவுகளை சமைக்க ஏதுவாக உள்ளது.

கார்போ ஹைட்ரேட்
கார்போஹைட்ரேட்
எந்த உணவாக இருந்தாலும், அதில் ஒரு பகுதி நிச்சயம் கலோரி மற்றும் கார்போ ஹைட்ரேட் ஆக இருக்கும். எடுத்துக்காட்டாக, நீங்கள் அதிகளவு வெங்காயத்தை உட்கொள்கிறீர்கள் 

அதாவது அரை கப் எடுத்துக் கொண்டாலும், வெறும் சிறிய அளவில் 21 கலோரியும் 5 கிராம் கார்போ ஹைட்ரேட் மட்டுமே எடுத்துக் கொள்வோம். 

இதனால் தான் சமையலுக்கு வெங்காயம் சிறந்த உட்பொருளாகவும், சுவையை சேர்க்கவும், உணவின் அளவை அதிகரிக்கவும் பயன்படுகிறது.

ஆரோக்கிய பலன்கள்

வெங்காயத்தில் வைட்டமின் சி உள்ளது மற்றும் இது குரோமியத்திற்கான மிகச்சிறந்த மூலப்பொருளாகவும் உள்ளது. காயங்களை ஆற்றுவது உள்ளிட்ட செல்களை சீரமைக்க வைட்டமின் சி முக்கியமானது. 

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், வயதாவதற்கு எதிரான பண்புகளுக்கும் இது முக்கியம். இன்சுலின் சுரப்பதற்கு குரோமியம் முக்கிய பங்காற்றுகிறது. 

இன்சுலின் என்ற ஹார்மோன், ஆற்றலுக்காக உடலை கிளுக்கோஸ் பயன்படுத்த தூண்டி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது.

நன்மைகள்
வெங்காயம் ஆரோக்கிய பலன்கள்
வெங்காயத்தில் க்குவர்சிடின் மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் உள்ள ஃபிளாவொனாய்டு போன்றவையும் அதிகமாக உள்ளன. 

விலங்குகள் ஆய்வு மற்றும் செல் ஆய்வின் மூலம் இந்த க்குவர்சிடின், கேன்சர் செல்களை கொன்று சிலவகை கேன்சரில் இருந்து பாதுகாக்கிறது என கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 

குறிப்பாக இந்த வகையான ஆய்வுகள் சாத்தியமான உதவிகரமான பலன்களை பரிந்துரைக்கும். ஆனால் அந்த பலன்கள் மனிதர்களுக்கு உதவும் என்பதற்கான ஆதாரங்களை தருவதில்லை. 
தொடக்கநிலை ஆய்வுகள் க்குவர்சிடின் இதய நோய்க்கான ஆபத்தை குறைக்க உதவியாக இருக்கும் என பரிந்துரைக்கிறது.

மேலும் சில ஆய்வுகள், வெங்காயத்தை நுகரும் போது அல்சர் போன்ற குறிப்பிட்ட சில நோய்கள் ஏற்படுவதை குறைக்கிறது என கண்டறியப் பட்டுள்ளது. 

எனினும், வெங்காயத்தை அறையில் வைப்பதன் மூலம் சளி மற்றும் காய்ச்சலை தடுக்கலாம் என்ற கட்டுக்கதை உண்மையல்ல.

ஏன் அழுகை வருகிறது?
ஏன் அழுகை வருகிறது?
வெங்காயத்தை வெட்டும் போது சல்ப்யூரிக் அமிலம் வெளியாவதாலும், உற்பத்தி யாவதாலும் அது கண்களை உறுத்துகிறது. வெட்டும் போது வெங்காயத்தின் செல்கள் உடைந்து அதன் உள்ளடக்கம் வெளியாகிறது. 

தனியாக வைக்கப்பட்டிருக்கும் என்சைம்கள் சல்பீனிக் அமிலத்துடன் கலந்து ப்ரோபனேதியல் எஸ் ஆக்ஸைடு உருவாகிறது. 

அதிலுள்ள சல்பர் சேர்மானம் கண்களை நோக்கி மேலே வந்து, அவற்றை எரிய வைத்து அழ வைக்கிறது. 

கண் எரிச்சலை குறைக்க கண்ணாடி அணியலாம் அல்லது வெட்டும் முன் வெங்காயத்தை குளிர்விக்கலாம்.

வாய் நாற்றமெடுக்குமா?
வாய் நாற்றமெடுக்குமா?
வெங்காயத்தில் உள்ள சல்போரஸ் சேர்மங்கள் இரத்த ஓட்டத்தில் உட்கவரப்பட்டு, வியர்வையின் போது வெளியேற்றப் படுகிறது. 

எனவே மக்கள் அவற்றை சாப்பிட்ட பின் 'வெங்காயத்தை போல மணம்" வீசுகின்றனர். சில நேரங்களில் உங்கள் மூச்சுக் காற்றையும் வெங்காயம் மணம் வீசச்செய்யும். 
இதிலிருந்து தப்பிக்க கொத்தமல்லி வகைகளை சாப்பிட முயற்சிக்கவும்.

ஸ்பிரிங் ஆனியன்
ஸ்பிரிங் ஆனியன்
வெங்காயத்தில் உள்ள சத்து, வெங்காயத்தின் அளவு மற்றும் சாப்பிடும் அளவை பொறுத்தது. 

பொதுவாக, துரித உணவகங்களில் வழங்கப்படும் சிறிய அளவு வெங்காயத் துகளில், 320 கலோரிகள், 16 கிராம் கொழுப்பு, 41 கிராம் கார்போ ஹைட்ரேட், 840 மில்லி கிராம் சோடியம் மற்றும் 3 கிராம் புரதம் உள்ளது.

தேர்ந்தெடுத்தல்
வெங்காயம் தேர்ந்தெடுத்தல்
எந்த வெட்டுகள், காயங்கள், அல்லது கறைகள் இல்லாத வெங்காயத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். 

முழுவதும் உரிக்கப்பட்ட வெங்காயம் வாங்கும் போது, வெளிப்புறத்தோல் காய்ந்தது போல இல்லாமல் இருப்பதை வாங்க வேண்டும். 
ப்ரஸ்ஸான, முன்கூட்டியே வெட்டப்பட்டதை வாங்கும் போது, காலாவதியாகும் முன் பயன்படுத்த வேண்டும்.

பிரிட்ஜ்ஜில்
பிரிட்ஜ்ஜில் வெங்காயம்
வெங்காயத்தை சரியான சூழ்நிலையில் சேமிக்கும் போது சிலகாலம் வைக்கமுடியும். காய்ந்த வெங்காயத்தை குளிர்ந்த, உலர்ந்த, இருட்டான, தேவையான காற்றோட்டமுள்ள இடத்தில் சேமிக்கவும். 

ப்ளாஸ்டிக்கில் சேமிக்க வேண்டாம். தேவையான காற்றோட்டம் இல்லையெனில் சேமிக்கும் நாட்கள் குறைந்து விடும்.

நடுத்தர மற்றும் இனிப்பு வெங்காய வகைகளின் பயன்படுத்தும் நாட்களை நீட்டிக்க விரும்பினால் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம். 

வெட்டிய வெங்காயத்தை பயன்படுத்த முடியவில்லை எனில் ,அவற்றை மூடிய கலனில் 7 நாட்கள் வரை சேமிக்கலாம். 

முன்கூட்டியே வெட்டப்பட்ட வெங்காயத்தை குளிர்சாதன பெட்டியில் வைத்து, காலாவதி தேதிக்கு முன் பயன்படுத்த வேண்டும்.

முட்டையுடன்
முட்டையுடன் வெங்காயம்
வெங்காயத்தை பயன்படுத்த பல வழிகள் உள்ளன. சாஸ் ,சில்லி அல்லது சூப்பில் சுவையூட்ட வெங்காயத்தை பயன்படுத்த வேண்டும். 
சான்விட்ச், விரேப்ஸ் அல்லது பர்கரில் வெங்காயத் துண்டுகளும், பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சாலட், சைடு டிஷ் அல்லது முட்டையுடன் பயன்படுத்தலாம்.

வறுத்த வெங்காயம்
வறுத்த வெங்காயம்
நன்கு வறுக்கப்பட்ட வெங்காயம் அல்லது வெங்காய சுருள்கள், முளைக்கும் வெங்காயத்தில் அதிக கலோரி, சோடியம் மற்றும் ஆரோக்கியமற்ற கொழுப்பு இருப்பதால் அவற்றை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

கூடுதல் அளவு

உங்கள் உணவுக்கு தேவையானதை விட கூடுதலாக வெங்காயம் சமைத்தோ அல்லது அப்படியே வெறும் வெங்காயத்தை சாப்பிடவும். 
அவற்றை காலை உணவாகவோ, மதிய உணவாகவோ, சிற்றுண்டி யாகவோ, இரவு உணவாகவோ சாப்பிடவும்.
Tags: