பருப்பு உருண்டை ரசம் செய்வது எப்படி?

பருப்பு உருண்டை ரசம் செய்வது எப்படி?

தேவையான பொருட்கள் :
புளித்தண்ணீர் – ஒன்றரை கப், 

மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,

ரசப்பொடி – 2 டீஸ்பூன்,

சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், எண்ணெய் – சிறிதளவு,

பூண்டுப் பல் – 2,

கறிவேப்பிலை – சிறிதளவு,

கடுகு – ஒரு டீஸ்பூன்,

உப்பு – சிறிதளவு.

உருண்டை செய்ய.:

கடலை பருப்பு, துவரம் பருப்பு – தலா அரை கப்,

சோம்பு – அரை டீஸ்பூன்,

பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கவும்),

கொத்த மல்லித்தழை – சிறிதளவு, காய்ந்த மிளகாய் – 2,

உப்பு – சிறிதளவு.

செய்முறை.:
பருப்பு உருண்டை ரசம்
பருப்புகளை அரை மணி நேரம் ஊற வைத்து, நீரை வடித்து அதனுடன் உப்பு, காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.

நறுக்கிய வெங்காயம், கொத்த மல்லித்தழையை இதில் போட்டுக் கலந்து, உருண்டைகளாக பிடித்து, இட்லித் தட்டில் வைத்து, ஆவியில் 10 நிமிடம் வேகவிட்டு எடுத்து கொள்ளவும்.
கடாயில் புளித்தண்ணீரை விட்டு, உப்பு, மஞ்சள் தூள், ரசப்பொடி, சாம்பார் பொடி சேர்த்து, பூண்டை நசுக்கிப் போட்டு கொதிக்க விடவும். 

கொதி வந்தவுடன் வெந்த பருப்பு உருண்டை சேர்த்து, மீண்டும் கொதி வந்ததும் அடுப்பை நிறுத்தவும். எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து ரசத்தில் சேர்க்கவும்.
Tags: