சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?

இரவு உணவுகள், பீட்சா மாவு, ரொட்டி, பன்கள் உட்பட அனைத்து பேக்கரி உணவுகளிலும் ஈஸ்ட் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. ஏனெனில் இது மாவை புளிக்க வைக்க உதவுகிறது. 
சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
சாதரணமாக ஒரு மாவில் இயற்கையாக ஈஸ்ட் பாக்டீரியா உற்பத்தியாகி அது புளிப்பதற்கு நேரம் ஆகும். ஆனால் நாம் அதை செயற்கையாக சேர்க்கும் போது மாவு சீக்கிரமே புளித்து விடுகிறது. 

உலர் ஈஸ்ட்டை சர்க்கரையுடன் சேர்க்கும் போது சர்க்கரை முன்னிலையில் செயல்ப்படுகிறது. இது கார்பன் டை ஆக்ஸைடு குமிழ்களை உருவாக்குகிறது. 

இந்த குமிழ்கள் அடர்த்தியான மாவில் சிக்கிக் கொள்கின்றன. பிறகு கார்பன் டை ஆக்ஸைடு வெப்பத்தில் விரிவடைந்து மாவை உயர்த்துகிறது. 
இந்த உயரும் செயல்முறையே புளித்தல் என அழைக்கப்படுகிறது. இதனால் நமக்கு பஞ்சு போன்ற உணவுகள் கிடைக்கின்றன.

சரி, இனி வீட்டிலேயே ஈஸ்ட் தயாரிப்பது எப்படி? என்று பார்ப்போம். 
தேவையான பொருள்கள் :

மைதா - கால் கப் 

தயிர் - 1 டேபிள் ஸ்பூன் 

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன் 

தண்ணீர் - தேவையான அளவு. 

செய்முறை : 
சுத்தமான ஈஸ்ட் வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
இவை அனைத்தும் நன்கு நீர்க்க கரைத்து, காற்று புகாமல் மூடி வைத்து, 2 நாட்கள் கழித்து திறந்து பார்த்தால் வருவது ஈஸ்ட். இதை ஒரு வாரம் வரை ஃப்ரிட்ஜில் வைத்திருந்து உபயோகிக்கலாம். 
இந்த மாவை நாண், ரொட்டி, குல்ச்சா என்று உபயோகிக்கலாம். 

ஈஸ்ட் ஒவ்வொரு பேக்கரியிலும் ஒவ்வொரு முறையில் தயாரிப்பதால், இங்கே பொதுவான முறை தரப்பட்டி ருக்கிறது.
Tags: