செஸ்வான் பிரான் செய்வது எப்படி?

செஸ்வான் பிரான் செய்வது எப்படி?

அனைத்து அசைவ உணவுகளைவிட, கடல் உணவுகளில் எப்போதுமே சத்துக்கள் அதிகம். காரணம், சாச்சுரேட் கொழுப்பு இந்த மீன்களில் உள்ளதால் உடல் எடையை அதிகரிக்காது. 
செஸ்வான் பிரான் செய்வது எப்படி?
மூளைக்கு மிகச்சிறந்த உணவாக மீன் திகழ்கிறது. மனித ஆயுளையும் கூட்டுகிறது. கண்பார்வை குறைபாடு முதல் தைராய்டு பிரச்சனை வரை தீர்வதற்கு மீன்கள் நல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. 

மீன் உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் வயதான பெண்களுக்கு ஏற்படும் இதயநோய் அபாயம் குறைகிறது. 

நரம்புத் தளர்ச்சி நோயும் நீங்குகிறது. மீன் உணவு சாப்பிட்டால் மன அழுத்த நோய் வராமல் தடுக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். இறால் மீனில் உள்ள சத்துக்கள் அபரிமிதமானவை. 

கனிமச்சத்தின் அளவு அதிகமாக உள்ளது. ஹீமோகுளோபினில் ஆக்ஸிஜன் கலக்கும் செயலில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த கனிமம். 
கூடுதல் இரும்புச்சத்து உடம்பில் ஏறும் போது, தசைகளுக்கு கூடுதல் அளவிலான ஆக்ஸிஜன் செல்லக்கூடும். இறால் மீனை குழந்தைகள் சாப்பிட்டு வந்தால், மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜனின் அளவும் அதிகரித்து ஞாபக சக்தி அதிகரிக்கும். 
இறாலில் அயோடின் சத்து நிறைய உள்ளதால், உடலில் தைராய்டு ஹார்மோன்கள் சுரக்க பேருதவி புரிகின்றன. இந்த ஹார்மோன்கள் குழந்தை பருவத்திலும், கர்ப்பமாக இருக்கும் நேரத்திலும், மூளையின் வளர்ச்சிக்காக தேவைப்படுகிறது. 

இறாலில் புரதம், கால்சியம், பொட்டாசியம் மற்றும் பல வைட்டமின்கள் உள்ளன. பல வகை புற்று நோய்களில் இருந்து காப்பதுடன், நுரையீரல் புற்றுநோய்க்கு எதிராக போராடும்.

தேவையானவை.:

இறால் – 350 கிராம்,

மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்,

மைதா – 1 டேபிள் ஸ்பூன்,

கார்ன் ஃப்ளார் – 1 டேபிள் ஸ்பூன்,

முட்டை – 1, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.

சாஸ் செய்ய…

பொடியாக நறுக்கிய வெங்காயம் – 1,

நசுக்கிய பூண்டு – 5 பல்,

நசுக்கிய இஞ்சி – 1 துண்டு,

ஸ்ப்ரிங் ஆனியன் – 1 கப்,

மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்,

செஷ்வான் சாஸ் – 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு, எண்ணெய், தண்ணீர் – தேவைக்கு,

கார்ன்ஃப்ளார் – 1 டீஸ்பூன்,

சர்க்கரை – 1/4 டீஸ்பூன்,

ஸ்ப்ரிங் ஆனியன் தண்டு – அலங்கரிக்க.
செய்முறை.:
செஸ்வான் பிரான்
மேரினேட் செய்ய கொடுத்துள்ள பொருட்களுடன் இறாலை கலந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்பு தவாவில் எண்ணெய் சேர்த்து இறாலை இரண்டு பக்கம் நன்கு வேகும் வரை பொரிக்கவும்.

மற்றொரு கடாயில் எண்ணெயை சேர்த்து வெங்காயம், இஞ்சி, பூண்டு, ஸ்ப்ரிங் ஆனியன், உப்பு, மிளகுத்தூள், செஷ்வான் சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கி, கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதில் சேர்க்கவும்.
சிறிது கெட்டியானதும் வறுத்த இறாலை சேர்த்து நன்கு கலந்து, கடைசியாக ஸ்ப்ரிங் ஆனியன் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.
Tags: