குஜராத்தி ஸ்டைல் மேத்தி தேப்லா ரெசிபி !





குஜராத்தி ஸ்டைல் மேத்தி தேப்லா ரெசிபி !

குஜராத்தில் பிரபலமான உணவுகளுள் தெப்லாவும் ஒன்று. சப்பாத்தி போன்ற ரெசிபி தான் தெப்லா. இதனை காலை, மதியம் மற்றும் இரவு உணவாக கூட சாப்பிடுவார்கள். 
குஜராத்தி ஸ்டைல் மேத்தி தேப்லா
கடலை மாவு அல்லது கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் இந்த தெப்லாவில் வெந்தயம், உப்பு மற்றும் மசாலா பொருட்கள் சில சேர்க்கப்படுகிறது. 
இதனை ஊறுகாய் மற்றும் சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். பயணத்தின் போது அதிகபடியாக எடுத்து செல்லப்படும் உணவுகளுள் இதுவும் ஒன்று.

எலுமிச்சை ஊறுகாய் அல்லது மேங்கோ ஜாம் சேர்த்து சாப்பிட ருசியாக இருக்கும். கடலை மாவு, வெந்தய கீரை, மஞ்சள் தூள், உப்பு, மிளகாய் தூள், சீரகம் மற்றும் தயிர் சேர்த்து செய்யப்படும் இந்த தெப்லா ஆரோக்கியம் நிறைந்தது. 

தேவையான பொருட்கள் :

கோதுமை மாவு - 1 கப்,

வெந்தயக்கீரை (மேத்தி) - 1 கப்,

புதினா - 1/4 கப்,

மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்,

தயிர் - 2 டேபிள் ஸ்பூன்,

உப்பு - தேவைக்கு,

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்,

சீரகம் - 1 டீஸ்பூன்.

செய்முறை :

புதினா, வெந்தயக் கீரையை நன்றாக கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய வெந்தயக் கீரை (மேத்தி), புதினா இலைகளைப் போட்டு, தயிர், மிளகாய் தூள், உப்பு, சீரகம் சேர்த்து நன்கு கலக்கவும்.
கடல் அலையில் சிக்கி உயிரிழந்த ராணுவ வீரர் - நெகிழ்ச்சி சம்பவம் !
10 நிமிடங்கள் கழித்து அதில் கோதுமை மாவைச் சேர்த்து சிறிது எண்ணெய் சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மிருதுவான மாவாகப் பிசைந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்.

இந்த மாவை சம அளவு உருண்டைகளாக எடுத்து, சப்பாத்தியாகத் திரட்டி, கல்லில் போட்டு இரு பக்கமும் சிறிது எண்ணெய் சேர்த்து சுட்டு எடுக்கவும். • சுவையான சத்தான மேத்தி தெப்லா ரெடி.
Tags: