இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை சரி செய்யும் திராட்சை வினிகர்?





இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை சரி செய்யும் திராட்சை வினிகர்?

பொதுவாக நாம் ஆப்பிள் சீடர் வினிகர் பற்றி கேள்விப் பட்டிருப்போம். அதன் ஆரோக்கிய நன்மைகள் மற்றும் அழகு குறிப்பில் அதன் பயன்பாடுகள் பற்றி அறிந்திருப்போம். 
இரத்த அழுத்தம் முதல் சர்க்கரை நோய் வரை சரி செய்யும் திராட்சை வினிகர்
ஆனால் நீங்கள் பால்சாமிக் வினிகர் பற்றி கேள்விப் பட்டதுண்டா? இதுவும் ஒரு வினிகர் வடிவமாகும். மேலும் இது ஒட்டு மொத்தமாக ஆரோக்கிய நன்மைகள் அடங்கிய ஒரு வினிகர் ஆகும்.

எல்லா வகை வினிகரும் ஒரே சமமாக இருக்க முடியாது. ஒன்று மற்றவற்றில் இருந்து வேறுபட்டு இருக்கும். 
அந்த விதத்தில் சிறந்த ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட ஒரு வகை வினிகர் இந்த பால்சாமிக் வினிகர். ஆப்பிள் சீடர் வினிகரை விட வேறுபட்டது இந்த பால்சாமிக் வினிகர். 

இதன் வேறுபட்ட நிறம் மற்றும் சுவை மற்ற வினிகரில் இருந்து வேறுபடுத்திக் காட்டுகிறது.

பால்சாமிக் வினிகர் என்பது திராட்சைகளை புளிக்க வைத்து தயாரிக்கப் படுவது. திராட்சை கொண்டு தயாரிக்கப்படும் ஒயினில் கூட இதனை பயன்படுத்துவார்கள். 

பால்சாமிக் வினிகர் என்பது ஒரு விலைமதிப்பில்லாத வினிகர் ஆகும். இதன் நன்மைகள் ஏராளம்.

பால்சாமிக் வினிகரின் ஆரோக்கிய நன்மைகள்

பால்சாமிக் வினிகர் ஊட்டச்சத்துகள் நிறைந்தது. இதில் பொட்டாசியம், கால்சியம், சோடியம், மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் உள்ளன. 
பால்சாமிக் வினிகரின் ஆரோக்கிய நன்மைகள்
செரிமான மண்டல செயல்பாடுகளை மேம்படுத்த உதவுகிறது. இதன் நன்மைகள் குறித்து சுருக்கமாக பார்ப்போம்.

* இரத்த சர்க்கரையைக் கட்டுப்படுத்த உதவுகிறது 

* கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது  

* இதய ஆரோக்கியத்திற்கு நல்லது 

* நீரிழிவிற்கு உகந்தது 

* பாக்டீரியா மற்றும் வைரஸ் போன்றவற்றை தடுக்கிறது 

* எடை இழப்பிற்கு உதவுகிறது 

* செரிமானத்தை அதிகரிக்கிறது 

* ஹைப்பர் டென்சனுக்கு நன்மை அளிக்கிறது

சிவப்பு மற்றும் கருப்பு திராட்சையில் இருந்து தயாரிக்கப்படும் பால்சாமிக் வினிகர் உயர்ந்த அளவு ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொண்டது. 
இது அழற்சிக்கான அபாயத்தை குறைக்க உதவுகிறது. மேலும் இதய நோய்கள், பல்வேறு வகையான புற்றுநோய் போன்ற வற்றை தடுக்க உதவுகிறது. 

பால்சாமிக் வினிகர் பற்றி மேலும் அறிந்து கொள்ள இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த வினிகர் மிகவும் நல்லது. ஏனெனில் பால்சாமிக் வினிகரில் க்ளைசீமிக் எதிர்ப்பு தன்மை இருப்பதால், 
சர்க்கரை நோய்
இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோயை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது.

கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை

உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும் நச்சு அணுக்களை தடுப்பதற்கு பால்சாமிக் வினிகரில் உள்ள ஆன்டிஆக்சிடெண்ட் உதவுகின்றன. 
கொலஸ்ட்ரால் மற்றும் இரத்த அழுத்த பிரச்சனை
அதனால் கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்த இந்த வினிகர் நல்ல பலன் தருகிறது.

கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்துவது மட்டுமில்லாமல், ஹைப்பர் டென்சன் அல்லது உயர் இரத்த அழுத்தம் ஆகிய வற்றை குறைக்கவும் பால்சாமிக் வினிகர் உதவுகிறது. 

அதனால் இதயம் சார்ந்த நோய்கள் குறித்த அபாயம் குறைகிறது.

செரிமானம் மற்றும் உடல் பருமன் 

பால்சாமிக் வினிகரில் காணப்படும் அசிடிக் அமிலம் செரிமானத்தை நிர்வகிக்க உதவுகிறது. இந்த வினிகரில் உள்ள ப்ரோபயாடிக், வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. 
செரிமானம் மற்றும் உடல் பருமன்
அதனால் குறைவான கலோரிகள் உட்கொள்ளப் படுகின்றன. இதனால் உங்கள் எடை இழப்பு சாத்தியமாகும்.

பால்சாமிக் வினிகரில் பூஞ்சை எதிர்ப்பு , கிருமி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதனால் கிருமிகளிட மிருந்து பாதுகாக்கவும் , காயங்கள் குணமாகவும் உதவுகிறது.
பால்சாமிக் வினிகரை உங்கள் தினசரி உணவில் எவ்வாறு இணைப்பது ?

இதனை சாலட்டில் சேர்த்து உட்கொள்ளலாம். காய்கறி சாலட்டில் மேல் பால்சாமிக் வினிகரை சிறிதளவு ஊற்றிக் கொள்ளலாம். 
பால்சாமிக் வினிகரை உங்கள் தினசரி உணவில் எவ்வாறு இணைப்பது
பொதுவாக புளிப்பு சுவை கொண்ட காரணத்திற்காக பலரும் வழக்கமான வினிகரை சாலட்டில் பயன்படுத்தும் போது, ஒரு மாற்றத்திற்காக இந்த வினிகரை நீங்கள் தேர்வு செய்யலாம்.

இது தவிர ஐஸ்க்ரீம் அல்லது இதர இனிப்புகளில் அலங்கரிக்க பால்சாமிக் வினிகரை பயன்படுத்தலாம். 
க்ரில் போன்ற உணவுகள் உட்கொள்ளும் போது அதற்கு ஊறுகாய் போல் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம் . 

குறிப்பு
வயிற்று எரிச்சல்
ஒன்றை மட்டும் கவனத்தில் கொள்ளுங்கள். அதிக அளவு வினிகர் உட்கொள்வதால் வயிற்று எரிச்சல் அல்லது வயிற்று உபாதை ஏற்படும். 

நீங்கள் ஒரு நாளில் எடுத்துக் கொள்ள வேண்டிய அளவு குறித்து கவனமாக இருங்கள். உங்கள் உணவில் வினிகர் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இதனால் வயிற்று எரிச்சல் அதிகமாகும்.
Tags: