ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !

ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம் !

காய்கறிகள் நன்கு சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால் - ருசியாக இருக்கும், பலமுறை ஒரே எண்ணெயை பயன்படுத்தினால் - ருசியாக இருக்கும்.
ஓட்டல்களில் உணவு ருசியாக இருக்க காரணம்
இறைச்சி மற்றும் மீன் உள்ளிட்ட கடலுணவு வகைகளை நன்றாக சுத்தம் செய்தார்களா என்பது நமக்கு தெரியாது, - அதனால் ருசியாக இருக்கும்.

ஹோட்டலில் தயாரிக்கும் உணவில் சுவையைக் கூட்ட வெண்ணெய், எண்ணெய், வினிகர், உப்பு போன்றவற்றை அதிக அளவில் சேர்த்துச் சமைப்பார்கள். - அதனால் ருசியாக இருக்கும்
ஒவ்வொருநாளும் பொரியல்களைச் செய்வதற்கு புதிய எண்ணெய் பயன்படுத்தப்படுவது குறைவு. ஒரு முறை பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது ருசியாக இருக்கும்.

யூ டியூபில் சென்று வத்த குழம்பு வைப்பது எப்படி என்று பாருங்கள்…ஒன்றல்ல ரெண்டல்ல ஏராளம் இருக்கும்…

ரெண்டு மூன்றை பார்த்து என்னென்ன சேர்க்கிறார்கள் எப்படி தயாரிக்கிறார்கள் என்று எழுதிக் கொள்ளவும். 
பின் அம்மாவையோ இல்லை மனைவியையோ அல்லது வேறு யாரிடமோ அவர்கள் வத்த குழம்பு வைக்கும் முறையை கேளுங்கள்….பின்பு தெரியும் வித்தியாசம்…
இது போலத்தான் எல்லாமே….சமையலை ஏன் கலை என்று சொன்னாங்க….தயாரிக்கும் முறை, அளவு, பொருட்களின் சேர்மானமே சுவை….

சும்மா ஹோட்டல் பொருளை குறை சொல்லாதிங்க…சரியா கழுவறதில்லை…பழைய எண்ணையிலேயே செய்யறாங்கன்னு
Tags: