சத்துக்கள் நிறைந்த நாட்டுக் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?





சத்துக்கள் நிறைந்த நாட்டுக் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?

மாமிச உணவு வகைகளை அதிகம் உண்பதை விட, காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொண்டாலே எந்த ஒரு நோயும் நமக்கு ஏற்படுவதில்லை. 
சத்துக்கள் நிறைந்த நாட்டுக் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
நாட்டு காய்கறிகள் என்பது பாரம்பரியாமாக காலங்காலமாக நாம் பயிர் செய்யும் காய்கறிகள். நாம் பயிரிடும் காய்கறிகளிலிருந்து விதைகளை எடுத்து மீண்டும் பயிரிடுவது தான். 

விலை அதிகமுள்ள நாட்டு காய்கறிகள் நாம் அலட்சியமாக நினைக்கும் சர்வ சாதாரணமான பல நோய்களை கட்டுபடுத்துகிறது. 

காய்கறிகள் அறிய மதிப்பு மிக்க சிட்ரிக், மாலிக், அஸிடிக், டானிக், டிர்டானிக் ஆகிய அமிலங்களை உற்பத்தி செய்கிறது .

இந்த இயற்கை அமிலங்கள் வயிற்றின் பசியையும் செரிமானத் சக்தியையும் அதிகரிக்க கல்லீரலின் இயக்கத்தை ஊக்குவிக்கிறது.
தேவையானவை:

கத்தரிக்காய், அவரைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், உருளை போன்ற காய்கறிகள் (எல்லாம் சேர்த்து)

ஒரு கிலோ பாசுமதி அல்லது சீரக சம்பா அரிசி - ஒரு கிலோ

வெங்காயம் - 400 கிராம்

தக்காளி - 400 கிராம்

புதினா - ஒரு கட்டு

கொத்தமல்லி இலை - ஒரு கட்டு

தயிர் - ஒரு கப்

இஞ்சி, பூண்டு (அரைத்தது) - 100 கிராம்

பட்டை - 2

லவங்கம் - 2

பிரிஞ்சி இலை - 2

பச்சை மிளகாய் - 8

தனியா தூள் - 2 குழிக்கரண்டி
செய்முறை :.
சத்துக்கள் நிறைந்த நாட்டுக் காய்கறி பிரியாணி செய்வது எப்படி?
காய்கறிகள், தக்காளி, புதினா, கொத்தமல்லி இலை போன்றவற்றை நறுக்குங்கள்.

குக்கரில் எண்ணெய் விட்டு பட்டை, லவங்கம் இலை தாளித்து புதினா, கொத்து மல்லி இலை, இஞ்சி - பூண்டு அரைத்ததையும் சேர்த்து வதக்கிக் கொள்ளுங்கள்.

அதிலேயே தக்காளி, வெங்காயத்தைப் போட்டு பச்சை வாசனை போக நன்றாக வதக்குங்கள். அத்துடன் பச்சை மிளகாய், நறுக்கிய காய்கறிகள் ஆகியவற்றை சேர்த்துக் கிளறுங்கள்.
அதன் பின்பு, அரிசி, மல்லித்தூள் சேர்த்துக் கிளறி விடுங்கள். இப்போது தயிர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளுங்கள்.
குக்கரில் இருந்து 3 விசில் சத்தம் வந்ததும் அடுப்பிலேயே 5 நிமிடங்கள் வைத்திருந்து இறக்கி விடுங்கள். அவ்வளவு தான்... சத்துக்கள் நிறைந்த நாட்டுக் காய்கறி பிரியாணி ரெடி.
Tags: