சுவையான செஸ்வான் சிக்கன் பிரை செய்வது எப்படி?





சுவையான செஸ்வான் சிக்கன் பிரை செய்வது எப்படி?

உலகம் முழுவதும் பல்வேறு உணவு பழக்கங்கள் உண்டு. இது அந்தந்த நிலப்பகுதிகளுக்கு ஏற்ப பல்வேறு வகைகளில் தயாரித்து பயன்படுத்து கிறார்கள். 
சுவையான செஸ்வான் சிக்கன் பிரை செய்வது எப்படி?
அந்த உணவு அவரவர் தட்பவெட்ப நிலைக்கு ஏற்ப அமைகிறது. அந்த வகையில் செஸ்வான் (Schezwan) என்பது சீன நாட்டு உணவு வகையாகும். 

நம் ஊரில் துணை உணவாக தேய்காய் சட்னி, புதினா சட்னி, காரச்சட்னி போல் சீன மக்களுக்கு செஸ்வான் ஒரு துணை உணவு ஆகும். 

இந்தியாவை போல சீன வகை உணவும் மருத்துவ குணம் வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. செஸ்வான் காய்ந்த மிளகாயை மையமாக வைத்து தயாரிக்கும் ஒரு வகை உணவு. 
இதில் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, சைனீஸ் வினிகர், எண்ணெய், சோயா சாஸ், தக்காளி சாஸ், வெள்ளை சர்க்கரை, உப்பு போன்றவை கலந்து தயாரிக்கப்படுகிறது. 

கார சுவையினை விரும்புபவர் களுக்காக தயாரிக்கப்படுகிற உணவு இது. சரி இனி சிக்கன் கொண்டு சுவையான செஸ்வான் சிக்கன் பிரை செய்வது எப்படி? என்று பார்ப்போம்.
தேவையானவை :

செஸ்வான் சாஸ் - 1/4 கப்

தண்ணீர் - 4 தேக்கரண்டி

எண்ணெய் - தேவையான அளவு

கொத்த மல்லி இலை - 3 தேக்கரண்டி

ஊற வைக்க...

சிக்கன் - 300 கிராம்

சில்லி ஃப்ளேக்ஸ் - 2 தேக்கரண்டி

உப்பு - சிறிது

மிளகு தூள் - 1 தேக்கரண்டி

பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

சோயா சாஸ் - 1 தேக்கரண்டி

சோளமாவு - 4 தேக்கரண்டி
செய்முறை :
சுவையான செஸ்வான் சிக்கன் பிரை செய்வது எப்படி?
சிக்கன் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ், மிளகு தூள், பூண்டு விழுது, சோயா சாஸ், சோளமாவு சேர்த்து பிசைந்து வைக்கவும். 
சூடான எண்ணெயில் சிக்கன் துண்டு களை போட்டு வறுத்து வைக்கவும். இப்போது கடாயில் செஸ்வான் சாஸ் மற்றும் தண்ணீர் விட்டு வறுத்த சிக்கனை சேர்த்து டாஸ் செய்யவும். 

பின் கொத்த மல்லி இலைகள் நிறைய சேர்த்து கலந்து பரிமாறவும்.
Tags: