கார்ன் சீஸ் சாண்ட்விச் செய்வது | Making Corn Cheese Sandwich !

கார்ன் சீஸ் சாண்ட்விச் செய்வது | Making Corn Cheese Sandwich !

0
தேவையான பொருட்கள்

கோதுமை பிரெட் - 6

ஸ்வீட் கார்ன் - 1 கப்

துருவிய சீஸ் - கால் கப்

கொத்த மல்லி - சிறிதளவு,

பச்சை மிளகாய் - 2

வெண்ணெய் - சிறிதளவு

உப்பு, மிளகு தூள் - தேவையான அளவு

கரம் மசாலா தூள் - அரை தேக்கரண்டி

செய்முறை
கார்ன் சீஸ் சாண்ட்விச் செய்வது
ஸ்வீட் கார்ன் வேக வைத்து கொள்ளவும். பச்சை மிளகாய், கொத்த மல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வேக வைத்த ஸ்வீட் கார்னை போட்டு அதனுடன் கொத்த மல்லி, கரம் மசாலா தூள், பச்சை மிளகாய், துருவிய சீஸ், உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

கோதுமை பிரெட்டின் இரு புறமும் வெண்ணெய் தடவி, நடுவில் கார்ன் கலவையை வைத்து, தவாவில் டோஸ்ட் செய்து எடுக்கவும்.

சூடாக சாஸுடன் பறிமாறவும். சூப்பரான கார்ன் சீஸ் சாண்ட்விச் ரெடி
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)