கீமா சன்னாதால் - கொத்துக்கறி கடலைபருப்பு செய்வது | Keema sannatal - Salamis Bengal gram dal !





கீமா சன்னாதால் - கொத்துக்கறி கடலைபருப்பு செய்வது | Keema sannatal - Salamis Bengal gram dal !

தேவையான பொருட்கள்:

மட்டன் கீமா - 300 கிராம்

கடலை பருப்பு - 100 கிராம்

எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்

மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்

கறி மசாலாத்தூள் - 2 டீஸ்பூன்

தேங்காய் - 3 டேபிள் ஸ்பூன்

முந்திரி பருப்பு - 4

வெங்காயம் - 2 பெரியது

தக்காளி - 2 பெரியது

இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்

கரம் மசாலா - அரை டீஸ்பூன்

பச்சை மிளகாய் - 3

மல்லி, புதினா - சிறிது

செய்முறை :
கீமா சன்னாதால் - கொத்துக்கறி கடலைபருப்பு செய்வது

எல்லாம் நறுக்கி தயார் செய்து வைக்கவும். தேங்காய் முந்திரி சேர்த்து அரைத்து வைக்கவும்.

 கடலை பருப்பை ஊற வைத்து குக்கரில் 2 -3 விசில் வைத்து வேக வைத்து தனியாக எடுத்து வைக்கவும்.

குக்கரில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், நறுக்கிய வெங்காயம் சிவற வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா வதக்கி,

தக்காளி, மல்லி புதினா, மிளகாய் சேர்த்து வதக்கி உப்பு போட்டு பிரட்டவும், தக்காளி மசிய வேண்டும்.

தக்காளி மசிந்ததும் மிள்காய்த் தூள், கறி மசாலாத் தூள் சேர்க்கவும், பின்பு நன்கு கழுவி நீர் வடிகட்டிய மட்டன் கீமாவை போட்டு பிரட்டி, சிறிது தண்ணீர் சேர்த்து கொதி வரவும் மூடி 4 - 5 விசில் வைத்து இறக்கவும்.

வேக வைத்த கடலை பருப்பு சேர்க்கவும் பிரட்டவும்,  அரைத்த தேங்காய் விழுது சேர்க்கவும், எல்லாம் சேர்ந்து கொதி வரவும் அடுப்பை சிம்மில் வைக்கவும். உப்பு சரி பார்க்கவும்.

இப்பொழுது சுவையான மட்டன் கீமா தயார், மல்லி இலை தூவி பரிமாறவும். இதனை ரசம் சாதம், சப்பாத்தி, பூரியுடனும் சாப்பிடலாம்.

குறிப்பு :

அவரவர் தேவைக்கு கீமா கெட்டியாக வேண்டுமானால், தேங்காய் உடன் தண்ணீர் குறைவாக சேர்க்க வேண்டும், 

கொஞ்சம் கிரேவி மாதிரி வேண்டு மானால் ஒரு கப் தண்ணீர் அரைத்த தேங்காய் விழுதுடன் சேர்த்து கீமா சன்னாதாலை கொதிக்க வைத்தால் ரெடி.
Tags: