கீரை தயிர் பச்சடி செய்வது ! Yogurt Spinach Pachadi Recipe !

கீரை தயிர் பச்சடி செய்வது ! Yogurt Spinach Pachadi Recipe !

0
தேவையானவை:
புளிக்காத புது தயிர் – 1 கப்,

முளைக்கீரை – அரை கட்டு,

பச்சை மிளகாய் – 2,

தேங்காய் துருவல் – 2

டேபிள் ஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

சீரகம் – அரை டீஸ்பூன்,

கடுகு – அரை டீஸ்பூன்,

எண்ணெய் – 1 டீஸ்பூன்.

செய்முறை:
கீரை தயிர் பச்சடி செய்வது
கீரையை சுத்தம் செய்து, மிகவும் பொடியாக நறுக்குங்கள். தேங்காய், பச்சை மிளகாய், சீரகம் மூன்றையும் சேர்த்து அரையுங்கள். 

குக்கரில் அரை கப் தண்ணீர், உப்பு சேர்த்து நறுக்கிய கீரையை சேர்த்து வேக வைத்து ஒரு விசில் வந்ததும் இறக்கி விடுங்கள்.

நன்கு ஆறியதும் எல்லா வற்றையும் ஒன்றாகக் கலந்து, எண்ணெயைக் காய வைத்து கடுகு தாளித்து சேர்த்து பரிமாறுங்கள். புதுமையான சுவையில் உங்களை அசத்தும் இந்த கீரை தயிர்பச்சடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)