தேவையானவை :

கசகசா - ¼ கப்

டேட்ஸ் சிரப் - 2 டீஸ்பூன்

நட்ஸ் பவுடர் - 1 டீஸ்பூன்

தேங்காய் பால் - 1 கப்

ஏலக்காய் - 1

நெய் - 2 டீஸ்பூன்

செய்முறை :
கசகசா பாயாசம் செய்வது எப்படி?
கசகசாவை 2-3 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து, பின் தண்ணீரை வடித்து நைசாக அரைக்கவும். 

வாணலியில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, அதில் அரைத்த கசகசாவைப் போட்டு நன்கு கொதிக்க விடவும்.

இறுதியாக, தேங்காய் பால், ஏலக்காய், டேட்ஸ் சிரப், நட்ஸ் பவுடர், நெய் சேர்த்துக் கலக்கவும். நன்கு கலக்கியதும் இறக்கி விடலாம்.