கத்தரிக்காய் – முருங்கைக்காய் பச்சடி செய்வது எப்படி?





கத்தரிக்காய் – முருங்கைக்காய் பச்சடி செய்வது எப்படி?

0
முருங்கைக்காய் குறைவான விலையில் கிடைக்கும் அதிக சத்து நிறைந்த காயாகும். முருங்கை மரத்தில் உள்ள காய், இலை, மற்றும் பூ போன்ற அனைத்து பாகங்களிலும் மருத்துவ பயன்கள் அதிகமாக உள்ளன. 
கத்தரிக்காய் – முருங்கைக்காய் பச்சடி செய்வது எப்படி?
காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கால்சியம், இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன. 

முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. முருங்கை காய் உடலுக்கு நல்ல வலுவைக் கொடுக்கும். 

இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும், தாது உற்பத்தி அதிகரிக்கும். வாரத்தில் குறைந்தது இரண்டு முறை முருங்கைக்காயை உணவாக எடுத்து கொண்டால் ரத்தமும், சிறுநீரும் சுத்தம் அடையும். 

குழந்தைகள் முருங்கைக்காய் விதைகளை சாப்பிட்டால் மலக்குடல்களில் இருக்கும் கிருமி பூச்சிகள் வெளியேறும். 

நிறைய புரோட்டீன்கள், நார்ச்சத்து, இரும்புசத்து, கால்சியம், சோடியம், பொட்டாசியம், சர்க்கரை, மாங்கனீசு, வைட்டமின் B6, A, C, B1, B2, கார்போ ஹைடிரேட், பாஸ்பரஸ், போன்ற சத்துக்கள் நிறைந்தவை தான் கத்தரிக்காய்கள்.
உடலுக்கு ஊட்டம் தருகின்ற அளவுக்கு ஏராளமான வைட்டமின்கள் இந்த கத்தரிக்காயில் உள்ளன.. 

நீர்ச்சத்தும், நார்ச்சத்தும் நிறைந்த காய் என்பதால் தான், உடல் எடையை குறைக்க இந்த காயை உணவில் அதிகம் பயன்படுத்துகிறார்கள். காரணம், 100 கிராம் கத்திரிக்காயில் 24 கலோரி மட்டுமே ஊட்டச்சத்து உள்ளன.
உடல் எடை: ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை கட்டுப்படுத்துகிறது. ரத்தத்தில் சேர்ந்துள்ள அதிகப்படியான கொழுப்புச் சத்தை குறைக்கிறது. இதனால், எடையும் கூடாமல் பாதுகாக்கிறது.

உஷ்ண தன்மை வாய்ந்த காய் என்பதால், சளி, இருமலை கட்டுப்படுத்துகிறது. உடல் சோர்வடைவதை தடுக்கிறது. இருமல் அதிகமாக இருந்தால், கத்தரிக்காய்களை சமைத்து சாப்பிடலாம்.

தேவையானவை:

துவரம் பருப்பு – அரை கப்,

முருங்கைக்காய் – 1,

கத்தரிக்காய் – 2,

பெரிய வெங்காயம் – 1,

பச்சை மிளகாய் – 4,

தக்காளி – 3,

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,

மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கு.

தாளிக்க:

கடுகு – அரை டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்,

சோம்பு – 1 சிட்டிகை,

எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை:
கத்தரிக்காய் – முருங்கைக்காய் பச்சடி செய்வது
துவரம் பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து வேக வையுங்கள். முருங்கைக் காய், கத்தரிக் காயை சிறு துண்டுகளாக நறுக்குங்கள். வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்குங்கள். 

பச்சை மிளகாயை கீறிக் கொள்ளுங்கள். எண்ணெயைக் காய வைத்து, கடுகு, உளுத்தம் பருப்பு, சோம்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், மிளகாய் சேர்த்து வதக்குங்கள். 

வெங்காயம் வதங்கியதும், கத்தரிக்காய், முருங்கைக் காய், உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக வதக்குங்கள்.

ஒரு கப் தண்ணீரில் புளியைக் கரைத்து, வடிகட்டி காய்க் கலவையில் சேருங்கள். பச்சை வாசனை போகக் கொதித்த பின் பருப்பை சேர்த்து இறக்குங்கள்.
பச்சை மிளகாய் க்குப் பதில் சாம்பார் பொடி ஒரு டீஸ்பூன் சேர்த்தும் செய்யலாம். மணமாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், இட்லி, தோசைக்கு தொட்டுக் கொள்ளவும் ருசியாக இருக்கும் இந்தப் பச்சடி.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)