அருமையான சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?





அருமையான சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?

0
சுரைக்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் சிறுநீரக கோளாறு, உடல் சூடு குறையும். சுரைக்காயின் சதைப் பகுதியை ரசமாக்கி அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்து பருகி வர சீறுநீரக கோளாறுகளிலிருந்து குணம் பெறலாம். 
அருமையான சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?
சிறுநீர் கட்டு, நீர் எரிச்சல், நீர் கட்டு, ஆகிய நோய்களுக்கு சிறந்தது. அஜீரணக் கோளாறு உள்ளவர்கள் சுரைக்காயை சாப்பிடலாம். கோடை காலத்தில் சுரைக்காயை சாப்பிட்டு வர தாகம் ஏற்படாது. 

மேலும் நாவறட்சியை போக்கும். கை, கால் எரிச்சல் நீங்க சுரைக்காயின் சதை பகுதியை எரிச்சல் உள்ள இடத்தில் வைத்து கட்டினால் எரிச்சல் குறையும். உடலை குளிர்ச்சியாக வைத்து கொள்ள விரும்பினால் சுரைக்காயை பயன்படுத்தலாம். 

பெரும்பாலான வீடுகளில் தினமும் காலை உணவு என்றால் அது இட்லி தோசையாகத்தான் இருக்கும். 
இதற்கு சைடிஷாக வெங்காய சட்னி, தக்காளி சட்னி, தேங்காய் சட்னி, கார சட்னி போன்ற சட்னிகளை மட்டுமே செய்வார்கள். இதனை தினமும் சாப்பிட்டு சில பேர் இட்லி தோசைகளையே வெறுத்து விடுவார்கள். 

நீங்கள் தினமும் ஒரே மாதிரியான சட்னியை செய்து கொடுக்காமல் வேறு விதமான சட்னியை செய்து கொடுக்கலாம். எனவே உங்களுக்காகவே இன்றைய பொதுநலம்.காம் சமையல் பதிவில் சுரைக்காய் சட்னி  எப்படி செய்வது என்பதை கொடுத்துள்ளோம். 

இந்த சட்னியை ஒரு முறை செய்து கொடுத்தீர்கள் என்றால் உங்கள் வீட்டில் உள்ள குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். 
தேவையானவை:

சுரைக்காய் (நறுக்கியது) – கால் கப்,

வெங்காயம் – ஒன்று,

தேங்காய் துருவல் – 2 டேபிள் ஸ்பூன்,

புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,

கொத்த மல்லித் தழை – கைப்பிடி அளவு,

பச்சை மிளகாய் – 4,

கடுகு – கால் டீஸ்பூன்,

உளுத்தம் பருப்பு – கால் டீஸ்பூன்,

எண்ணெய் – 2 டீஸ்பூன்,

உப்பு – தேவைக்கேற்ப.
செய்முறை:
சுரைக்காய் சட்னி செய்வது எப்படி?
வாணலியில் எண்ணெயை சூடாக்கி, சுரைக்காய் துண்டுகள், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய் துருவல், புளி, கொத்த மல்லித் தழை, உப்பு சேர்த்து வதக்கவும். 

ஆற வைத்து, அரைக்கவும். மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து அரைத்த விழுதில் சேர்க்கவும். நீர்ச்சத்து மிகுந்த சட்னி இது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)