10 புள்ளைங்கள பெத்துக்க முடிஞ்சதுக்கு காரணமே சிறுதானியம் !





10 புள்ளைங்கள பெத்துக்க முடிஞ்சதுக்கு காரணமே சிறுதானியம் !

0
கிருஷ்ணகிரி மாவட்டம், ஐகுந்தம் முத்துக் கொட்டாயைச் சேர்ந்த சிலுக்கம்மாள், சிறுதானியம் குறித்து பகிர்ந்து கொண்ட தகவல்கள்…
10 புள்ளைங்கள பெத்துக்க முடிஞ்சதுக்கு காரணமே சிறுதானியம்
”கம்பு, சோளம் இதை யெல்லாம் ஆறு மாசத்துக்கு சேமிச்சு வெச்சு சாப்பிடுவோம். கம்பு, சோளத்தை ஊறவெச்சு, கல்லு உரல்ல இடிச்சு, புடைச்சு வர்ற மாவை களிக்குப் போடுவோம்.

கம்பு, சோளத்த இடிக்கும் போது சலிச்சது போக, ஒண்ணு… அரையா இருக்குற தானியத்தோட புளி, மிளகாய், பூண்டு, வெங்காயத்த சேர்த்து தாளிச்சு, வெறுஞ்சாறு (குழம்பு) செஞ்சு சாப்பிடுவோம்.

சாமை அரிசியைக் கழுவுன தண்ணியில ரசம் வெச்சு, சாமை சோத்துக்கு ஊத்தி சாப்பிடுவோம். அதுவும் அவ்வளவு ருசியா இருக்கும்.

களியிலயும், குழம்புலயும் சிறுதானியம் முழுசா இருக்கும். வயிறு நிறைய சாப்பிட்டாலும், ஜீரண பிரச்னை வந்ததில்ல.
சிறுதானியங்கள் கொடுக்கற தெம்புல தான் பொழுதுக்கும் எங்களால வேலை செய்ய முடியுது.

இது வரைக்கும் இடுப்பு வலி, கை கால் வலினு எதுவும் வந்ததில்ல. கிராமத்து பொம்பளைங்க. 10 புள்ளைங்கள சாதாரணமா பெத்துக்க முடிஞ்சதுக்கு காரணமே… சிறு தானியங்கள் தான்.

மாதவிலக்கு பிரச்னையில இந்தக் காலத்து பொம்பளைங்க இன்னிக்கு எவ்வளவு அவஸ்தை படறாங்க. ஆனா, எந்தப் பிரச்னையும் இல்லாம, நாங்க அத கடந்து வந்திருக்கோம்.

இன்னிக்கும் ஒரு வேளை கேழ்வரகு, கம்பு களினு சாப்பிடறதால தான் 75 வயசுலயும் தெம்பா வேலை செய்ய முடியுது. சக்கரை வியாதி எட்டி பார்க்கல.

குழந்தைங்க சாப்பிடாதுனு இப்பல்லாம் சிலர் சொல்லிக்க றாங்க. ஆனா, என் பேரப் பிள்ளைங் களுக்கு கேழ்வரகுக் களி, கம்பு ரொட்டி எல்லாம் கொடுக்கிறேன். நல்லாவே சாப்பிடுதுங்க’ என்று சொன்னார்
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)