அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை !

அந்தரங்க பிரச்சினைகளுக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு மூலிகை !

0
இப்பேரண்டத்தில் ஏராளமான மூலிகைகள் இருந்தாலும் ஒரு சில மூலிகையின் பெயர்களே நமக்கு தெரிந்திருக்கும். சில மூலிகை நம் வீட்டிலே வளர கூடிய தன்மை கொண்டதாக இருக்கும். சில மூலிகைகளை தெரு ஓரங்களில் நம்மால் காண முடியும். 
அந்தரங்க பிரச்சினைக்கு தீர்வு தரும் தேள் கொடுக்கு
ஒரு சில அபூர்வ மூலிகைகள் மலை பகுதியில் வளரகூடிய தன்மை கொண்டவை யாக இருக்கும். அந்த வகையில், தேள் கொடுக்கு என்கிற இந்த மூலிகை மிக எளிதாக தெரு ஓரங்களிலே நம்மால் காண முடியும். 

இது போன்று தெரு ஓரங்களில் கிடைக்கும் மூலிகைக்கு சக்தி அதிகம் என சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மூலிகையை நம்மால் வீட்டிலே வளர்த்து கொள்ள இயலும்.
ஆண்களுக்கான அந்தரங்க பிரச்சினை களை தீர்க்கவும் இது மிக சிறந்த மூலிகை என சித்தர்களின் குறிப்புகள் கூறுகின்றன. 

இனி இந்த மூலிகையின் முழு பயன்களையும், எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.

தேள் கொடுக்கு

பார்க்க சற்று வித்தியாசமாக இருக்கும் இந்த செடியை எளிதில் நம்மால் அறிந்து கொள்ள இயலும். 
தேள் கொடுக்கு
இது தேள் கொடுக்கு போன்ற அமைப்பை கொண்டிருப்பதால் இதை தேள் கொடுக்கு என நம் ஊரில் அழைத்து வருகின்றனர்.

பெரும்பாலும் இது தெரு ஓரங்களில் காணப்படும். இதை பலவித மருத்துவ பயன்பாட்டிற்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம்.

நுரையீரல் பிரச்சினை
நுரையீரல் பிரச்சினை
நுரையீரலில் அதிக சளி சேர்ந்து விட்டால் அதனை விரட்ட இந்த எளிய மூலிகை பயன்படும். இதை நம் வீட்டிலே மூலிகை மருந்தாக தயாரிக்க கூடிய குறிப்பை சித்தர்கள் தந்து விட்டு சென்றுள்ளனர்.

இதற்கு தேவையான பொருட்கள்...

திப்பிலி 3

சுக்குப் பொடி சிறிது

தேன் 1 ஸ்பூன்

தேள் கொடுக்கு இலை

தயாரிக்கும் முறை
தேள் கொடுக்கு மூலிகை
முதலில் தேள்கொடுக்கு இலைகளை அலசி அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் நீர் சேர்த்து அதில் அரைத்த இலை, பொடியாக்கிய திப்பிலி, சுக்கு பொடி போன்றவற்றை சேர்த்து கொள்ளவும்.

இதை கொதிக்க விட்டு இறக்கி கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி தேன் கலந்து குடித்து வந்தால் சளி தொல்லை நீங்கும்.

சிறுநீரக பிரச்சினைகளு க்கு
சிறுநீரக பிரச்சினைகளுக்கு
சிறுநீரக பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. இந்த பிரச்சினைகளு க்கு தீர்வை தர சிறந்த மருந்தாக தேள் கொடுக்கு உதவுகிறது. 
பனானா சாக்லேட் ஐஸ்கிரீம் செய்வது !

சிறுநீரக கற்களினால் உண்டாகும் பிரச்சினைக்கும் இது தீர்வை தருகிறது. 

விஷக்கடி
விஷக்கடி
பாம்பு, தேள், பூரான் போன்ற விஷக்கடியை முறிக்க இந்த மூலிகை உதவுகிறது. இதற்கு பெரிதாக எதையும் செய்ய வேண்டியதில்லை. 

மாறாக தேள் கொடுக்கு இலையை அலசி, அரைத்து கொண்டு விஷக்கடி இருக்கின்ற இடத்தில் தடவி வந்தால் தீர்வு கிடைக்கும்.

அந்தரங்க பிரச்சினை
அந்தரங்க பிரச்சினை
அந்தரங்க உறுப்பில் உண்டாக கூடிய சில பிரச்சினை களை நம்மால் வெளியில் கூட சொல்ல முடியாது. 

குறிப்பாக அந்தரங்க உறுப்பில் அரிப்பு, தொற்றுகள், புண்கள், சிராய்வு ஏற்பட்டதன் மூலமாக உண்டாக்கிய காயங்கள் போன்ற வற்றிற்கு தீர்வை தர தேள் கொடுக்கு உதவுகிறது.

இதற்கு தேவையான பொருட்கள்...

தேங்காய் எண்ணெய் 4 ஸ்பூன்

தேள் கொடுக்கு இலை

மஞ்சள் 1 ஸ்பூன்

தயாரிப்பு முறை
அந்தரங்க இடத்தில் புண்கள்
முதலில் தேள் கொடுக்கு இலையை அரைத்து கொள்ளவும். அடுத்து ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் ஊற்றி அதில் அரைத்த இலையை சேர்க்கவும். 

பின் மஞ்சள் சேர்த்து நன்றாக காய்ச்சி தையலாம் போன்ற பதத்திற்கு வந்தவுடன் இறக்கி கொள்ளவும். 

இதை அந்தரங்க இடத்தில் உள்ள புண்கள், சிராய்வுகள், சொரி, அரிப்பு போன்ற வற்றில் தடவி வந்தால் எளிதில் குணமாக்கி விடலாம்.
பல தீர்வுகள்
கல்லீரல் பிரச்சினை
இந்த வகை மூலிகை செடிகள் பெரும்பாலும் ஏராளமான நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கும். 

அந்த வகையில், இவற்றை கல்லீரல் பிரச்சினை, உயர் இரத்த அழுத்தம், சரும பிரச்சினை, சிறுநீரக தொற்றுகள் போன்ற வற்றிற்கு நாம் பயன்படுத்தி கொள்ளலாம். 

இவை மூட்டு வலிகளை தீர்க்கவும் அருமருந்தாக பயன்படுகிறது.

எச்சரிக்கைகருக்கலைப்பை உண்டாகும் அபாயம்
பொதுவாகவே மூலிகைகளை ஒரு சிலர் எடுத்து கொள்ள கூடாது என்கிற வரையறை இருக்க தான் செய்யும். அதே போல தான், தேள் கொடுக்கு மூலிகையை கர்ப்பிணி பெண்கள் எடுத்து கொள்ள கூடாது. 

இவை கருக்கலைப்பை உண்டாகும் அபாயம் கொண்டவையாம். மேலும், இதனை மிக குறைந்த அளவே எடுத்து கொள்ள வேண்டும். இதன் அளவு அதிகரித்தால் விஷ தன்மை பெற்று விடும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)